News
அதுக்கு பின்னாடி பெரிய வழக்கு நடந்துச்சு!.. விஜய்யின் சாய் பாபா கோவிலுக்கு பின்னால் உள்ள மர்மம்?..
அரசியலுக்கு வந்தது முதலே மக்களுக்கு பல நன்மைகளை செய்து வருகிறார் நடிகர் விஜய். இந்த நிலையில் தற்சமயம் தன்னுடைய அம்மாவின் ஆசையை நிறைவேற்றும் வகையில் சாய்பாபா கோவில் ஒன்றை கட்டி கொடுத்துள்ளார். ஆனால் அந்த கோவில் இருக்கும் இடத்திற்கு பின்னால் வில்லங்கம் இருப்பதாக பிரபல பத்திரிக்கையாளர் பிஸ்மி கூறுகிறார்.
அதில் அவர் கூறும்போது சென்னையை விரிவுப்படுத்தும்போது பிரபலங்களின் பல பகுதிகள் அரசால் கையகப்படுத்தப்பட்டன. தி.மு.க கட்சி ஆட்சியில் இருந்தப்போது உதயம் தியேட்டர் பக்கத்தில் விஜய் பேரில் இருந்த ஏக்கர் கணக்கான நிலத்தை அரசு கையகப்படுத்திக்கொண்டது.

இடத்தில் உள்ள பிரச்சனை:
அதன் பிறகு எஸ்.ஏ சந்திரசேகர் அப்போதைய முதல்வரான கலைஞர் மு கருணாநிதியிடம் கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஒரு நிலத்தை அவர்கள் விஜய்க்காக கொடுத்தனர். ஆனால் கொரட்டூரில் உள்ள அந்த நிலம் 1969 ஆம் ஆண்டு ரத்தின குமார் என்பவரிடம் இருந்து அரசு கைப்பற்றிய நிலமாகும்.
இந்த நிலையில் அந்த நிலம் தன்னுடையது என நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் ரத்தினக்குமார். ஆனாலும் கூட தீர்ப்பு விஜய்க்கு சாதகமாகவே வந்தது. இருந்தாலும் அந்த இடத்தில் வில்லங்கம் நீடித்து வருவதால் வீடு கட்டினால் எதிர்காலத்தில் பிரச்சனை வரலாம்.

எனவேதான் விஜய் அங்கு கோவிலை கட்டியுள்ளார் விஜய் என கூறுகிறார் பிஸ்மி. மேலும் தொடர்ந்து விஜய் ஒரு கிருஸ்துவர் என்கிற பேச்சு அரசியல்வாதிகளிடம் இருந்து வருகிறது. இதை உடைக்கும் வகையிலும் இந்துக்களிடம் ஓட்டு வாங்கும் திட்டத்திலும்தான் அந்த கோவிலை கட்டியுள்ளார் விஜய் என்கிறார் பிஸ்மி.
அரசு கையகப்படுத்திய இடத்திற்கு பதிலாக வேறு இடத்தை வழங்கியுள்ளது. இதில் என்ன வில்லங்கம் இருக்கிறது என இதுக்குறித்து கேள்வி எழுப்புகின்றனர் ரசிகர்கள்.
