தயாரிப்பாளர் கண்ணீர் விட்டதை பார்த்து ஓடி வந்த விஜய்!.. அந்த மனசுதான் சார்!.

தமிழில் ஒரு சில திரைப்படங்களை மட்டுமே தயாரித்திருந்தாலும் கூட நடிகர்கள் மத்தியில் செல்வாக்கு உள்ள தயாரிப்பாளராக இருந்தவர் தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன். வேட்டையாடு விளையாடு மாதிரியான சில வெற்றி படங்களை இவர் தயாரித்துள்ளார்.

ஆனால் அவருக்கு தொடர்ந்து ஏற்பட்ட திரைப்படத்தின் தோல்விகளால் தற்சமயம் திரைப்படங்களை தயாரிப்பதில்லை. அதற்கு தகுந்தாற் போல தற்சமயம் திரைப்படங்களில் நடிகர்களின் சம்பளம் என்பதும் எக்கச்சக்கமாக அதிகரித்து வருகிறது. இதனால் சின்ன தயாரிப்பாளரக்ள் எல்லாம் படம் இயக்க முடியா நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படத்தை தயாரிக்கும்போது பெரிய ஹீரோக்கள் எப்படி உதவினார்கள் என கூறுகிறார் மாணிக்கம் நாராயணன். இந்திரலோகத்தில் நா அழகப்பன் திரைப்படம் வடிவேலுவை வைத்து இயக்கி வந்த படம் என்பதால் அந்த திரைப்படத்தை பெரிய ஹீரோக்களை வைத்து ப்ரோமோஷன் செய்ய வேண்டும் என முடிவெடுத்தார் மாணிக்கம் நாராயணன்.

thalapathy-vijay1
thalapathy-vijay1
Social Media Bar

அதன்படி அந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சூர்யா,சிம்பு, விஜய் ஆகியோரை அழைத்திருந்தார். விஜய்க்கு மட்டும் வேலை இருந்ததால் வர முடியாது என கூறிவிட்டார். ஆனால் சூர்யாவும் சிம்புவும் அவர் அழைத்ததற்காக வருவதாக கூறிவிட்டனர்.

இதை கூறும் மாணிக்கம் நாராயணன் திரைத்துறையில் எனக்கு இவ்வளவு மரியாதை இருப்பது மிகுந்த ஆனந்தமாக இருக்கிறது. விழா துவங்கி சிறிது நேரத்தில் விஜய்யும் அங்கு வந்துவிட்டார். அதை பார்த்ததும் எனக்கு ஆனந்த கண்ணீரே வந்துவிட்டது.

நான் அழுவதை பார்த்த விஜய் அங்கிருந்து ஓடி வந்து என்னை கட்டிப்பிடித்தார். நான் தான் வந்துட்டேனே அப்புறம் ஏன் அழுகிறீர்கள் என என்னை ஆறுதல்படுத்தினார் என விஜய் கூறியதாக ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார் மாணிக்கம் நாராயணன்.