என்னங்கய்யா ஹிந்தில படம் பண்ண சொன்னா தமிழில் பண்ணி வச்சிருக்கீங்க!.. விரக்தியில் கமல்ஹாசன் நடித்து ஹிட் கொடுத்த படம்!.

Kamalhaasan :  தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்தியாவில் பழமொழிகளிலும் நடித்து வெற்றி வாகை சுட வேண்டும் என்று நினைத்தவர் நடிகர் கமல்ஹாசன். கமல்ஹாசன் நடிக்கும் படங்களுக்கு இளைஞர்கள் மத்தியில் இருந்த வரவேற்புதான் அவரை பெரும் நடிகராக மாற்றியது.

ரஜினிகாந்த் சினிமாவிற்கு வாய்ப்பு தேடி வந்த காலகட்டத்திலேயே கமல்ஹாசன் பெரும் நடிகராக இருந்தார். அதை தாண்டி கமல்ஹாசனுக்கு சினிமாவின் மீது இருந்த பெரும் ஆர்வமும் இதற்கு முக்கிய காரணம்.

திரைப்படத்தில் நடிப்பது மட்டுமின்றி பல துறைகளில் வேலை பார்த்திருக்கிறார் கமல்ஹாசன். அப்படி வேலை பார்க்கும் பொழுது எதேர்ச்சையாகத்தான் அவருக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் கிடைத்தது. ஹிந்தியிலும் தனது பெயரை வலுவாக பதிக்க வேண்டும் என்று நினைத்தார் கமல்ஹாசன்.

Social Media Bar

ஏனெனில் ஹிந்தி சினிமாவில் தமிழ் சினிமாவை விட அதிக சம்பளம் வழங்கப்பட்டது. இந்த நிலையில் ஏ.வி.எம் நிறுவனத்திடம் ஒரு நாள் சென்ற கமல்ஹாசன் தன்னை வைத்து ஹிந்தியில் ஒரு படத்தை எடுக்குமாறு கூறினார்.

அதனை அடுத்து ஹிந்தியில் அவரை வைத்து படம் எடுப்பதற்கான அனைத்து வேலைகளும் நடந்தது. அதற்கான சம்பளத்தையும் ஏ.வி.எம் நிறுவனம் கொடுத்து விட்டது. ஆனால் அந்த படத்தை எடுப்பதில் சில சிக்கல்கள் ஏற்பட்டது.

எனவே அதே கதையை தமிழில் படமாக்கி விடலாம் என முடிவு செய்தனர் அப்படி எடுக்கப்பட்ட திரைப்படம்தான் சகலகலா வல்லவன். சகலகலா வல்லவன் திரைப்படம் ஆக்கப்பட்டபோது அதில் வேண்டா வெறுப்பாக தான் நடித்தார் கமல்ஹாசன். ஏனெனில் ஹிந்தி மார்க்கெட்டுக்கு என்று எழுதப்படும் கதை தமிழில் பெரிதாக வெற்றி பெறுமா என்பது சந்தேகம்தான். ஆனால் அந்த திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வெற்றியை கொடுத்து கமலுக்கு ஒரு அடையாளமாக அமைந்தது.