உங்களால முடியும் போங்கடா!.. நடிகர் விஜய்யால் சிகரத்தை தொட்ட மூன்று இயக்குனர்கள்!..

தமிழ் சினிமாவில் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் விஜய். சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் பலராலும் கேலியாக பேசப்பட்டவர் நடிகர் விஜய். தற்போது இவரை கொண்டாடாதவர்கள் யாரும் இல்லை என்று தான் கூற வேண்டும்.

தன்னுடைய திறமையினால் மட்டும் இவ்வளவு தூரம் தமிழ் சினிமாவில் பயணித்து வரும் நடிகர் விஜய் தற்போது வரை முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது நடிகர் விஜய்னால் தான் தாங்கள் இந்த அளவிற்கு வளர்ந்திருக்கிறோம் என கூறிய மூன்று முக்கிய இயக்குனர்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய் நடிகர் மட்டுமல்லாமல் பல படங்களுக்கு பின்னணி பாடகர் ஆகவும் இருக்கிறார். தனது சினிமா வாழ்க்கையில் அறுபதுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமாக இருந்து வரும் நடிகர்கள் ஒருவராக உள்ளார். 1984 இல் வெற்றி என்ற தமிழ் திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார்.

vijay
Social Media Bar

பிறகு 1992ல் வெளியான நாளைய தீர்ப்பு என்ற திரைப்படத்தில் தன்னுடைய 18ஆவது வயதில் முக்கிய இடத்தில் நடித்ததன் மூலம் பலராலும் அறியப்பட்டார். அதன் பிறகு அவர் பூவே உனக்காக, லவ் டுடே, காதலுக்கு மரியாதை, துள்ளாத மனமும் துள்ளும், குஷி ஆகிய திரைப்படங்களை அடுத்தடுத்து வெற்றி படங்களாக கொடுத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

1998ல் தமிழக அரசியல் கலைமாமணி விருதும் பெற்றிருந்தார். கடந்த 2004 ஆம் ஆண்டு அவர் நடிப்பில் வெளிவந்த கில்லி திரைப்படம் 50 கோடிக்கு மேல் வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படமாக மாறியது.

பிறகு திருப்பாச்சி, போக்கிரி ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாகவும் பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தது. துப்பாக்கி, கத்தி, சர்க்கார் போன்ற வெற்றி படங்களில் நடித்த விஜய் பல விருதுகளை பெற்று இருக்கிறார். மேலும் இளைய தளபதி என்று அழைக்கப்பட்ட விஜய் தற்போது தளபதி என பலராலும் அறியப்படுகிறார்.

சமீபத்தில் தன்னுடைய சினிமா வாழ்க்கையை முடித்துவிட்டு அரசியலின் உடைய போவதாக அறிவிப்பு ஒன்று வெளியிட்டு இருந்தார். அதன்படி தற்போது தமிழக வெற்றி கழகம் என்ற ஒரு கட்சியை ஆரம்பித்து முழு நேர அரசியல் பணியை தொடங்க இருக்கிறார் விஜய்.

விஜயினால் உயர்ந்த மூன்று இயக்குனர்கள்

இயக்குனர் நெல்சன் ஒருமுறை மேடையில் பேசும்பொழுது ரஜினி சாரை வைத்து நான் படம் பண்ணுவதற்கு முதல் காரணமே நடிகர் விஜய் தான். அவர்தான் என்னிடம் முதலில் நீ தைரியமாக சாரிடம் சென்று பேசு. நிச்சயம் உன்னை அவர் படத்திற்கு சம்மதிப்பார் என்ற நம்பிக்கையை கொடுத்தார் என நெல்சன் தெரிவித்தார்.

vijay

பிறகு ஒரு முறை இயக்குனர் அட்லி மேடையில் பேசும்பொழுது எனக்கு தன்னம்பிக்கை, தைரியம் கொடுத்தது நடிகர் விஜய் தான். உங்களை நான் பார்த்திருக்கிறேன். உங்கள் நேச்சர் எனக்கு பிடிக்கும். ஒரு கதையுடன் வாருங்கள். நிச்சயம் படம் பண்ணலாம் என எனக்கு கூறியது அவர்தான் என அட்லி கூறி இருக்கிறார்.

லோகேஷ் கனகராஜ் அவர் மேடையில் பேசும்பொழுது நான் பல ஸ்டார்களுடன் படம் செய்து இருக்கிறேன். எல்லோரையும் நான் சார் சார் என்று அழைப்பேன். ஆனால் எனக்கு அண்ணன் எனக்கு கூப்பிட தோன்றிய முதல் நபர் விஜய் தான் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Popular News

Categories

Copyrights © 2025 Cinepettai. All rights reserved.