Connect with us

சூப்பர்மேன் அடுத்த பாகத்திற்கான அப்டேட்! –  டிசி வெளியிட்ட செய்தி!

Hollywood Cinema news

சூப்பர்மேன் அடுத்த பாகத்திற்கான அப்டேட்! –  டிசி வெளியிட்ட செய்தி!

cinepettai.com cinepettai.com

ஹாலிவுட்டில் பிரபல சூப்பர் ஹீரோவான சூப்பர் மேன் கதாபாத்திரத்தை தொடர்ந்து டிசி நிறுவனம் படமாக்கி வருகிறது. இதுவரை பலமுறை சூப்பர் மேன் திரைப்படம் வெளிவந்துள்ளது.

ஆனால் ஒவ்வொரு முறையும் ஏதோ ஒரு காரணத்தால் சூப்பர் மேன் திரைப்படம் பாதியிலேயே நின்றுவிடுகின்றன. முதன் முதலாக 1978 இல் வந்த சூப்பர் மேன் திரைப்படம் மட்டுமே ஒழுங்காக 4 பாகங்கள் வந்தன. அதற்கு பிறகு வந்த சூப்பர் மேன் ரிட்டன்ஸ் ஒரு பாகத்திற்கு பிறகு வரவில்லை.

அதன் பிறகு இயக்குனர் சேக் ஸ்னைடர் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு வந்த மேன் ஆஃப் ஸ்டீல் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இதில் ஹென்றி கேவில் கதாநாயகனாக நடித்திருந்தார். பேட்மேன் வெர்சஸ் சூப்பர்மேன், ஜெஸ்டிஸ் லீக் திரைப்படங்களிலும் இவரே சூப்பர் மேனாக நடித்தார்.

இந்த நிலையில் தற்சமயம் சூப்பர் மேன் திரைப்படங்கள் தற்சமயம் இயக்குனர் ஜேம்ஸ் கன் கைக்கு வந்துள்ளது. இவர் ஏற்கனவே ப்ரைட் பர்ன், கார்டியன் ஆஃப் தி கேலக்ஸி போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் சூப்பர் மேன் கதாபாத்திரத்தில் இருந்து ஹென்றி கேவிலை தூக்கிவிட்டார்.

அதற்கு பதிலாக வேறு ஆளை வைத்து சூப்பர்மேன் லீகசி என்கிற புது திரைப்படத்தை இயக்க உள்ளார். இந்த திரைப்படம் 2025 இல் வெளிவரும் என கூறப்பட்டுள்ளது.

இதனையடுத்து அதிருப்தியில் உள்ளனர் ஹென்றி கேவில் ரசிகர்கள்.

POPULAR POSTS

vadivelu police
kong vs godzilla
aadujeevitham 2
varalaxmi and sarathkumar
kamalhaasan ilayaraja
SA chandrasekar bussy anand
To Top