Connect with us

எனக்கு கை கால் நல்லாதான் இருக்கு!.. இந்த பணம் வேண்டாம்!.. சிவகார்த்திகேயனுக்கும் ப்ளாக் பாண்டிக்கும் இடையே வந்த பஞ்சாயத்து!..

sivakarthikeyan black pandi

Cinema History

எனக்கு கை கால் நல்லாதான் இருக்கு!.. இந்த பணம் வேண்டாம்!.. சிவகார்த்திகேயனுக்கும் ப்ளாக் பாண்டிக்கும் இடையே வந்த பஞ்சாயத்து!..

Social Media Bar

Sivakarthikeyan and Black pandi: நடிகர் சிவகார்த்திகேயன் தமிழில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக இருக்கிறார். சிவகார்த்திகேயனை பொறுத்தவரை அவரைப் போலவே சினிமாவில் வாய்ப்பை தேடி வரும் பல இளைஞர்களுக்கு அவர் சினிமாவில் வாய்ப்பு தேடி கொடுத்து இருக்கிறார்.

அதிலும் யூட்யூப்பர்கள் விஜய் டிவியில் ஏற்கனவே பணிபுரிந்தவர்கள் போன்றவர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு தேவைப்படும் பொழுது தனது திரைப்படம் வழியாகவே வாய்ப்பு கொடுத்துள்ளார். அதேபோல சிவகார்த்திகேயன் தயாரிக்கும் திரைப்படங்களிலும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்து இருக்கிறார்.

அந்த வகையில் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் நாடகம் மூலமாக பிரபலமானவர் நடிகர் பிளாக் பாண்டி. கில்லி முதலான சில படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் அவர் வந்திருப்பதை பார்க்க முடியும் ஆனால் சினிமாவில் அவருக்கு பெரிய அங்கீகாரம் என்று எதுவும் கிடைக்கவில்லை.

சிறிது நாட்களில் அவருக்கு வாய்ப்புகளே கிடைக்காமல் போனது. இந்த நிலையில் அவருக்கு உதவுவதற்காக ஒருமுறை சிவகார்த்திகேயன் அவரது வீட்டிற்கு பணம் கொடுத்து அனுப்பி இருக்கிறார். ஆனால் பணமாக கொடுப்பதை விடவும் திரைப்படத்தில் ஒரு வாய்ப்பு வாங்கிக் கொடுத்தார் என்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தார் ப்ளாக் பாண்டி.

எனக்கு கை கால்கள் நன்றாகதான் இருக்கிறது என்னால் உழைத்து சாப்பிட முடியும் நீங்கள் இதை சிவகார்த்திகேயன் அண்ணனிடமே கொடுத்து விடுங்கள். ஆனால் அதற்கு பதிலாக எனக்கு ஒரு வாய்ப்பு மட்டும் வாங்கிக் கொடுத்தார் என்றால் கொஞ்சம் உதவியாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். ஆனால் அந்த உதவியாளர் சிவகார்த்திகேனிடம் என்ன கூறினார் என்று தெரியவில்லை அதன் பிறகு சிவகார்த்திகேயன் பிளாக் பாண்டியிடம் பேசுவதே இல்லையாம் இந்த விஷயத்தை ஒரு பேட்டியில் பிளாக் பாண்டி பகிர்ந்து இருந்தார். 

Source: Video link

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top