Friday, June 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
horror

உலகையே உலுக்கி எடுத்த டாப் ஹாரர் தமிழ் டப்பிங் படங்கள்!. அதுவும் பல பாகங்கள் வந்த படங்கள்!.

by Arun
August 26, 2024
in News, Special Articles
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

சினிமாவில் என்னதான் பல வித்தியாசமான கதைகள் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும் பேய் படங்களுக்கு எப்போதும் மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் பல பேய் படங்கள் வெளிவந்து மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அந்த படத்தின் பல பாகங்கள் வெளிவந்து வரவேற்பு பெற்றும். ஒரு சில ஹாலிவுட் ஹாரர் படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு பல பாகங்களாக வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும்.

தற்போது இந்த பதிவில் நாம் தமிழில் டப்பிங் செய்யப்பட்டு வெளிவந்த ஹாரர் படங்களை பற்றி பார்க்கலாம்.

Final destination

final destination

ஃபைனல் டெஸ்டினேஷன்மொத்தம் ஐந்து பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இதில் முதல் படம் கடந்த 2000 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தை ஜேம்ஸ் வோங் இயக்கி இருந்தார். இதன் அடுத்த பாகம் 2003 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தை டேவிட் ஆர். எல்லிஸ் இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் மொத்தம் ஐந்து பாகம் மொத்தம் 3 இயக்குனர்களால் இயக்கி வெளிவந்திருக்கிறது. இந்த 5 பாகத்தின் கதையும் ஒன்றுதான். கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்கும் தங்களைச் சுற்றி உள்ளவர்களும், தாங்களும் சாகப் போகிறோம் என்பது முன்கூட்டியே தெரிகிறது.

Read More:  10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

இந்த மரணம் அவர்களை துரத்துகிறது. இதிலிருந்து அவர்கள் எப்படி தப்பிக்கிறார்கள் என்பது தான் படத்தின் கதை ஆகும். மேலும் இந்த படம் ஹாரர் திரைப்படமாக பெயர் பெற்றதற்கு காரணம் இந்த படத்தில் பல காட்சிகளும் த்ரில்லாக குறைந்த செலவில் எடுக்கப்பட்டு அதிக வசூலை பெற்ற திரைப்படமாகும் இருக்கிறது.

Wrong turn

wrong turn

இந்த படம் மொத்தம் 7பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இதன் முதல் பாகம் 2003இல் வெளிவந்திருக்கிறது. இதன் கடைசி பாகம் 2021 இல் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தின் கதை மனிதர்களை கொடூரமாக கொள்ளும் சைக்கோ கொலைகாரர்களிடமிருந்து உயிர் வாழ்வதற்காக போராடும் மனிதர்கள், கடைசியில் அவர்களிடமிருந்து தப்பித்து உயிர் வாழ்ந்தார்களா என்பது தான் இந்த படத்தின் கதை ஆகும்.

Resident Evil Movie

the resindent evil

இந்த இந்த படம் மொத்தம் 6 பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இந்த படத்தின் கடைசி பாகம் 2016-ல் வெளிவந்திருக்கிறது. இந்தப் படத்தின் மொத்தம் 6 பாகங்களையும் இரண்டு இயக்குனர்கள் இயக்கியுள்ளார்கள்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

மேலும் இந்த படம் முதல் பாகத்தில் இருந்து தொடர்ச்சியான கதைகளை கொண்ட பாகங்களாக அமைவதால், இந்த படத்தை பாகம் ஒன்றிலிருந்து பார்க்க வேண்டும். இந்த படத்தின் கதை ஒரு ஆய்வகத்தில் வைரஸ் ஒன்று பரவுகிறது. இந்த வைரஸால் அங்கு உள்ளவர்கள் ஜாம்பிகளாக மாறுகிறார்கள். அங்கிருந்து வெளிவந்த ஜாம்பிகளால், மற்றவர்களும் ஜாம்பிகளாக மாறுகிறார்கள். இதிலிருந்து தப்பித்த கதாநாயகி அந்த வைரஸை அழிக்க முயற்சிக்கிறாள்.

SAW

saw

இந்தப் படம் மொத்தம் 9 பாகங்கள் வெளிவந்திருக்கிறது. இந்த படத்தில் முதல் பாகம் கடந்த 2004 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. கடைசி பாகம் 2021 இல் வெளிவந்திருக்கிறது. மேலும் இந்த படத்தின் பாகம் 10 இந்த ஆண்டு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சைக்கோ கொலைகாரனால் கடத்தப்படும் மனிதர்கள் பயங்கரமான கேம்ஸ் விளையாடுவதற்கும் அல்லது ஆய்வுக்கும் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இதில் மாட்டிக்கொண்ட நபர்கள் இறுதியில் உயிர் பிழைத்தார்களா என்பது தான் படத்தின் கதையாக அமைகிறது. இந்த 10 பாகத்தையும் மொத்தம் 5 இயக்குனர்கள் இயக்கியிருக்கிறார்கள். மிகவும் பயங்கரமான காட்சிகளை கொண்ட இந்த படம் பார்ப்பவர்களை அச்சத்தில் உறையவைக்கும்.

Read More:  Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

The Conjuring Movie

The Conjuring Movies

இந்த படம் மொத்தம் 3 பாகங்களாக வெளிவந்திருக்கிறது. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த 2013 ஆம் ஆண்டும், இரண்டாவது பாகம் 2016 மற்றும் மூன்றாவது பாகம் 2021 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது. இந்த படம் 1950களில் நடந்த உண்மையான சம்பவத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும்.

மேலும் இந்த படத்தில் வரும் அத்தனை ஹாரர் காட்சிகளும் உண்மையாக நடந்தது என கூறப்படுவதால் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்திருக்கிறது. இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக பார்ப்பவர்களை உறைய வைக்கும் அளவிற்கு இருக்கும். மேலும் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் நல்ல வசூல் செய்த திரைப்படமாக இருக்கிறது.

மேலும் இந்த படத்தின் முதல் பாகத்தில் வரும் அன்னாபெல் என்னும் பொம்மை தற்போது அமெரிக்காவில் உள்ள ஒரு மியூசியத்தில் உண்மையாகவே வைக்கப்பட்டிருக்கிறது.

Tags: horror movies tamilதமிழ் சினிமா
Previous Post

அப்பா இறந்தப்பிறகு அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் போன் பண்ணுனார்.. நடிகைக்கு வந்த டார்ச்சர்!.. அம்பலமாகும் உண்மைகள்!.

Next Post

நீயா நானாவில் பேசிய பையனுக்கு உதவி செய்ய முன் வந்த தளபதி!.. ஆனந்த கண்ணீர் வடிக்கும் குடும்பம்!.

Related Posts

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026

Naruto இட்டாச்சுக்கும் கக்காஷிக்கும் உள்ள நட்பு… சலார் மாதிரி ஒரு நட்பு.!

February 13, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

காந்தாரா திரைப்படமும்.. மக்கள் தெய்வங்களும்.. தமிழ் சினிமா எந்த இடத்தில் கோட்டை விட்டது..!

October 23, 2025
Next Post
vijay neeya naana

நீயா நானாவில் பேசிய பையனுக்கு உதவி செய்ய முன் வந்த தளபதி!.. ஆனந்த கண்ணீர் வடிக்கும் குடும்பம்!.

Recent Updates

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026
விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved