மத்தவங்கள விட அதிகமாதான் அமெளண்ட் வாங்குறேன்? – தன் மீதுள்ள குற்றச்சாட்டுக்கு பதிலளித்த உதயநிதி!

சமீப காலங்களாக இணையத்தில் உதயநிதி ஸ்டாலின் அதிகமாக ட்ரெண்டிங் ஆகி வருகிறார். சினிமா பிரபலங்களை அடிக்கடி பேட்டிகளில் கலாய்த்து வருவதை தற்சமயம் வாடிக்கையாக செய்து வருகிறார் உதயநிதி.

சினிமா வட்டாரங்களில் உதயநிதி மீது பரவலாக ஒரு குற்றச்சாட்டு உண்டு. அதாவது திரைக்கு வரும் படங்களில் அதிகமான திரைப்படங்களை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமே வாங்கி வெளியிடுகிறது என கூறப்பட்டது.

அதற்கு தகுந்தாற் போல தற்சமயம் வெளியாகும் திரைப்படங்களில் அதிகமான திரைப்படங்களை உதயநிதியே வாங்கி வெளியிடுகிறார். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளிக்கும் விதமாக உதயநிதி கூறும்போது “பல படங்களை தயாரிப்பாளர்களே என்னிடம் வந்து தருகின்றனர். இத்தனைக்கும் மற்ற வெளியீட்டாளர்களை விடவும் நான் அதிக ப்ரசண்டேஜ்தான் கேட்கிறேன்.

 ஆனாலும் ஏன் என்னிடம் தருகிறார்கள் என்றால், சரியான சதவீதத்தில் பங்குகளை திரையரங்குகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் வாரா வாரம் நான் பிரித்து தந்துவிடுவேன்” அதனால்தான் என்னிடம் படத்தை தருகின்றனர் என விளக்கியுள்ளார் உதயநிதி.

Refresh