தற்சமயம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருக்கும் நபர்களில் மிக முக்கியமானவராக மாதம்பட்டி ரங்கராஜ் இருந்து வருகிறார். திடீரென்று இந்த மாதம்பட்டி ரங்கராஜ் ஏன் மக்கள் மத்தியில் இவ்வளவு பிரபலமாக இருக்கிறார் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.
ஆனால் பல வருடங்களாகவே சினிமா துறையில் இருந்து வரும் ஒருவராகதான் மாதம்பட்டி ரங்கராஜ் இருக்கிறார். நடிகர் கார்த்தி, பிரபுவின் மகள் திருமணம் போன்ற பல பிரபலங்களின் திருமணங்களில் கேட்டரிங் சர்வீஸ் செய்தவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ்.
துப்பாக்கிக்கு நடுவில் சமையல்
இதற்கு முன்பே சினிமாவின் மீது ஈடுபாடு கொண்டு மெஹந்தி சர்க்கஸ் என்கிற திரைப்படத்தில் இவர் கதாநாயகனாக நடித்திருந்தார். மாதம்பட்டி ரங்கராஜன் கதை என்ன என்று பார்க்கும் பொழுது அது பலருக்கும் எதிர்பார்ப்பை தூண்டும் ஒரு கதையாக இருக்கிறது.
ஒரு சாதாரண கிராமத்தில் சமையல்காரர் ஆக இருந்த மாதம்பட்டி தங்கவேலு என்பவருக்கு மகனாக பிறந்தவர்தான் மாதம்பட்டி ரங்கராஜ். மாதம்பட்டி தங்கவேலு இளமை காலங்களில் இருந்து சமையல் மாஸ்டராக இருந்து வந்தார். ஆனால் அதனால் அவர் மிகவும் கஷ்டப்பட்டார்.
படிப்பு
எனவே தனது மகன் சமையல் தொழிலுக்குள் வரக்கூடாது என்று கூறி அவரை 3டி அனிமேஷன் படிப்பை படிக்க வைத்தார் மாதம்பட்டி தங்கவேலு. 3d அனிமேஷன் படிப்பை படித்த மாதம்பட்டி ரங்கராஜ் தொடர்ந்து எம் பி ஏவும் படிக்க சென்றார்.
இந்த நிலையில் தன்னுடைய கேட்டரிங் சர்வீஸ் தொழிலை தொடர்ந்து நடத்த முடியவில்லை என்ற தங்கவேலு தனது மகனிடம் உதவி கேட்டார் இதனை அறிந்த ரங்கராஜ் உடனே சென்று கேட்டரிங் படிக்க சென்றார். கேட்டரிங் முடித்துவிட்டு எம்.பி.ஏ வும் படித்த காரணத்தினால் ஒரு பெரிய தொழிலாக கேட்டரிங்கை எப்படி கொண்டு செல்வது என்று யோசித்தார் மாதம்பட்டி ரங்கராஜ்.
ஏனெனில் அதுவரை சமையல்காரர் என்றால் ஒரு கேவலமான விஷயமாக பார்த்து வந்தனர். அதனாலேயே அவரது தந்தையான மாதம்பட்டி தங்கவேலுவை உறவினர்களை மோசமாக பார்த்து வந்தனர்.
தொழில் வளர்ச்சி
இந்த நிலையில் அந்த தொழிலை ஒரு மரியாதையான தொழிலாக மாற்ற வேண்டும் என்று நினைத்தார் மாதம்பட்டி ரங்கராஜ். அப்படிதான் புது கேட்டரிங் சர்வீஸ் ஒன்றை உருவாக்கினார். அதாவது மாதம்பட்டி ரங்கராஜ் எந்த திருமணத்திற்கு சென்று சமைத்தாலும் அந்த திருமணத்தில் பைவ் ஸ்டார் ஹோட்டல் அளவிற்கான உணவுகள் வழங்கப்படும்.
ஆனால் அதை மிகவும் குறைந்த பட்ஜெட்டிலேயே அவர் வழங்குவார் இதுதான் மாதம்பட்டி ரங்கராஜின் தனித்துவமாக அமைந்தது. அதனை தொடர்ந்து பிரபலம் அடைய தொடங்கினார் மாதம்பட்டி ரங்கராஜ். பெரிய பெரிய பணக்காரர்கள் அனைவருமே திருமண விழாக்களை நடத்தும் பொழுது அதில் மாதம்பட்டி ரங்கராஜ் தான் சமைக்க வேண்டும் என்று கேட்கத் தொடங்கினர்.
இதனால் ஒரே முகூர்த்தத்தில் ஏகப்பட்ட திருமணங்களில் சமைக்க வேண்டிய சூழ்நிலை மாதம்பட்டி ரங்கராஜ்க்கு ஏற்பட்டது. இதனை தொடர்ந்துதான் 200க்கும் அதிகமான நபர்களைக் கொண்ட ஒரு பெரிய கேட்டரிங் சர்வீஸை அவர் நிறுவினார்.
அதனை தொடர்ந்து சில ஹோட்டல்களையும் நிறுவினார் மாதம்பட்டி ரங்கராஜ். சிங்கப்பூர், துபாய் மாதிரியான ஒரு சில நாடுகளில் இவருக்கு ஹோட்டல்கள் இருக்கின்றன. துப்பாக்கி தாங்கிய காவலர்களுக்கு நடுவே பிரதமர் மோடிக்கு சமைத்துள்ளார் மாதம்பட்டி ரங்கராஜ். இப்படி ஒரு சாதாரண குடும்பத்தில் பிறந்து தற்சமயம் பெரிய தொழிலதிபராக வளர்ந்திருக்கும் ஒரு காரணத்தினால் தான் மாதம்பட்டி ரங்கராஜ் ஒரு முக்கியமான பிரபலமாக மக்கள் மத்தியில் இப்பொழுது பார்க்கப்படுகிறார்.