Latest News
Fight Club Movie: ஒரு ஃபுட் பால் ப்ளேயரின் கதை இது!.. ஃபைட் கிளப் படம் எப்படி இருக்கு!.. சுருக்கமான விமர்சனம்…
Uriyadi Vijayakumar Fight Club: தமிழ் சினிமாவில் அறிமுகமான முதல் படத்திலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றவர் நடிகரும் இயக்குனருமான உறியடி விஜயக்குமார். உறியடி விஜயகுமாரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜும் பல நாட்களாக நட்பில் உள்ளனர் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும்.
இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் தற்சமயம் உறியடி விஜயகுமார் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் ஃபைட் கிளப். கிளப் திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார் என்று தெரிந்ததுமே ஒரு வரவேற்பு உண்டானது. மேலும் உறியடி விஜயகுமார் அவர் நடித்த முதல் படத்திலேயே தரமான வெற்றியையும் தரமான நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தார்.
எனவே இந்த திரைப்படமும் நன்றாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்கும் முதல் நாளே நல்ல நேர்மறையான விமர்சனங்கள் வர துவங்கியுள்ளன. படத்தின் கதைப்படி ஃபுட்பால் விளையாட்டு வீரராக இருக்கும் உறியடி விஜயகுமார் அதில் முன்னேறுவதற்கான முயற்சிகளை எடுத்துக் கொண்டிருக்கிறார்.
அதே தெருவில் இன்னொரு நபர் புட்பால் கற்றுத்தரும் நபராக இருக்கிறார் மிகவும் நல்ல கதாபாத்திரமாக இருக்கும் அவர் ஏதோ ஒரு காரணத்தால் ஒரு ரவுடி கும்பலால் கொல்லப்படுகிறார். இந்த நிலையில் கதாநாயகனுக்கும் அந்த ரவுடி குழுவிற்கும் இடையேயும் ஒரு சண்டை உருவாகிறது.
அவர்களை எப்படி கதாநாயகன் சமாளிக்கிறார் என்பதே படத்தின் கதையாக இருக்கிறது. இந்த படத்தில் குறிப்பிடுவது கதாநாயகனை அல்ல அந்த வில்லனின் குழுவைதான் என தெரிகிறது. இந்த திரைப்படம் ஆரம்பித்தது முதல் முடிவு வரை மிகவும் சுறுசுறுப்பாக செல்கிறது.
படத்தில் நிறைய சண்டை காட்சிகள் இருந்தாலும் உறியடி திரைப்படம் போலவே இந்த திரைப்படம் இருப்பதாக சிலர் கூறுகின்றனர். படத்தில் சண்டை காட்சிகளுக்காக மிகவும் கஷ்டப்பட்டு இருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த படம் வெற்றி படமாக அமைவதற்கான வாய்ப்புகள் முதல் நாளிலேயே அதிகமாக தெரிகின்றன.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்