Actress
நெஜமாவே மேல ஆடை இருக்கா!.. ட்ரான்ஸ்பரண்ட் ஆடையில் சொக்க வைக்கும் வாத்தி பட நடிகை.. இவ்வளவு மாடர்ன் தாங்காது!..
கேரளா நாட்டிலிருந்து வந்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் நடிகை சம்யுக்தாவும் ஒருவர். சம்யுக்தா தமிழில் நிறைய திரைப்படங்களில் நடித்திருந்தாலும் வாத்தி திரைப்படம் அவருக்கு ஒரு அடையாளமாக அமைந்தது.
2016 முதலே சினிமாவில் நடித்த வருகிறார் சம்யுக்தா. கேரளாவை சேர்ந்த சம்யுக்தா கல்லூரி படிப்பை முடித்த உடனே சினிமாவில் முயற்சி செய்ய தொடங்கிவிட்டார். அதனை தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு பாப்கார்ன் என்கிற திரைப்படத்தில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
மலையாளத்தில் எண்ட்ரி:
அதே வருடம் அவரது நடிப்பில் தீவண்டி என்கிற மலையாள படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக டொவினோ தாமஸ் நடித்திருந்தார். இவர் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர் ஆவார்.
அதனால் இந்த படத்திற்கு ஓரளவு வரவேற்பு கிடைத்தது. தமிழில் முதன் முதலில் களரி என்கிற திரைப்படத்தில்தான் அறிமுகமானார் சம்யுக்தா. இந்த திரைப்படத்தில் விஷ்ணுவர்தனின் தம்பியான கிருஷ்ணா நடித்திருந்தார்.
ஆனால் இந்த திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை அதற்கு பிறகு சம்யுக்தா நடித்த ஜூலை காற்றில் என்கிற திரைப்படமும் பெரிதாக வரவேற்பை வரவில்லை.
வாத்தி பட வாய்ப்பு:
தொடர்ந்து மலையாள சினிமாவில் நடிப்பதற்கு நடுவே தமிழ் சினிமாவிலும் முயற்சி செய்து வந்து கொண்டிருந்தார் சம்யுக்தா. இந்த நிலையில் தான் 2023 ஆம் ஆண்டு சமயுக்தா வாத்தி திரைப்படத்தில் நடித்தார். வாத்தி திரைப்படம் தெலுங்கிலும் வெளியாக இருந்ததால் தெலுங்கு நடிகை ஒருவரை தான் கதாநாயகியாக்க வேண்டும் என்று இருந்தனர்.
ஆனால் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் சம்யுக்தாவிற்கு அந்த திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து அதன் மூலமாக தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பு பெற்றார் தற்சமயம் தெலுங்கு மலையாளம் தமிழ் என்று மூன்று மொழிகளிலும் வரவேற்பு பெற்று நடித்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் சம்யுக்தா வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன ரசிகர்கள் பலரும் இதற்கு லைக் அளித்து வருகின்றனர்.