News
ட்ரெண்டிங் ஆகி வரும் அப்பத்தா பாடல் – கலக்கும் வடிவேலு
சில சினிமா உட்தகராறுகளால் வடிவேலு திரைத்துறையில் வெகு காலங்களாக இல்லாமல் போய்விட்டார். தமிழ் சினிமாவில் வடிவேலு மிக முக்கியமான நடிகர்.

அவர் அளவிற்கு வேறு யாரும் நகைச்சுவையில் ஆதிக்க செலுத்தியது கிடையாது. நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு போராடி வெகு காலங்களுக்கு பிறகு கதாநாயகனாக நடிக்க துவங்கினார்.
இவர் கதாநாயகனாக நடித்த 23 ஆம் புலிகேசி, இந்திரலோகத்தில் நா அழகப்பன்,தெனாலி ராமன், எலி ஆகிய அனைத்து படங்களுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற படங்களாகும்.
இந்த நிலையில் நடிகர் வடிவேலு வெகு காலங்களுக்கு பிறகு திரும்பவும் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் நாய் சேகர் ரிட்டன்ஸ். நாய்களை முக்கிய கதாபாத்திரங்களாக கொண்டு இந்த படம் இருக்கும் என கூறப்படுகிறது.
இந்த படத்தில் மொத்தம் 4 பாடல்கள். நான்கு பாடல்களையும் வடிவேலே பாடியுள்ளார். இந்த பாடல்களுக்கு இயக்குனர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பிரபு தேவா டான்ஸ் மாஸ்டராக பணிபுரிந்துள்ளார்.
தற்சமயம் இந்த படத்தில் உள்ள அப்பத்தா என்கிற பாடல் வெளியாகி பெரிதாக ட்ரெண்ட் ஆகி வருகிறது. வெளியாகி 15 மணி நேரத்தில் 40 லட்சம் வீவ்களை பெற்றுள்ளது. தற்சமயம் யூ ட்யூப்பில் 3 வது ட்ரெண்டிங் வீடியோவாக உள்ளது.
வீடியோவை காண இங்கு க்ளிக் செய்யவும்.
