News
கொஞ்ச நாளில் வாரிசு முழு வெர்ஷன் வரும்! – மகிழ்ச்சி தகவல் அளித்த இயக்குனர்!
பொதுவாக தெலுங்கு இயக்குனர் என்றாலே அதிக நேரத்திற்கு படத்தை எடுப்பதுதான் வழக்கம். ஏனெனில் தெலுங்கு சினிமாவில் திரைப்படங்கள் அதிகப்பட்சம் 3 மணி நேரம் வரையில் இருக்கும்.

விஜய் நடித்து வெளிவந்த வாரிசு படத்தை இயக்கியதும் தெலுங்கு இயக்குனரான வம்சிதான். வம்சி படத்தை பெரும் பொருட் செலவில் எடுத்துள்ளார். தற்சமயம் வாரிசு படத்தின் வெற்றி விழா பேட்டியில் பேசும்போது வாரிசு படத்தின் வெற்றி குறித்து மிகவும் சந்தோஷப்படுவதாக கூறியிருந்தார்.
மேலும் வரும் காலங்களில் வாரிசு படத்தின் முழு வெர்ஷனை விட இருப்பதாகவும் கூறினார். அதாவது வாரிசு படத்தை முழுதாக எடிட் செய்து பார்க்கும்போது அதன் அளவு கிட்டத்தட்ட நான்கு மணி நேரம் வரை வந்ததாம். ஆனால் நேரத்தை குறைக்க வேண்டி பல காட்சிகளை நீக்கி விட்டார்களாம்.
எனவே வாய்ப்பிருக்கும் பட்சத்தில் வாரிசு படத்தின் முழு வெர்ஷனை ஓ.டி.டி வழியாக விடலாம் என முடிவெடுத்துள்ளார் இயக்குனர். இது விஜய் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான செய்தியாக அமைந்துள்ளது.
