வாரிசு முதல் சிங்கிள் தீபாவளிக்கு வருது – உறுதி செய்த தமன்

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்து தயாராகிவரும் திரைப்படம் வாரிசு. இந்த படத்தில் கதாநாயகியாக ராஷ்மிகா நடித்துள்ளார். தமன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Social Media Bar

வாரிசு குடும்ப கதையாக இருக்கும் என கூறப்படுகிறது. சமீப காலமாக விஜய் குடும்ப படங்கள் எதுவும் நடிக்காததால் இந்த படத்திற்கு அதிக வரவேற்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடித்து தீபாவளிக்கு வெளிவர இருக்கும் பிரின்ஸ் திரைப்படத்தின் வெளியீட்டு விழா நடந்தது. அதில் இசையமைப்பாளர் தமனும் கலந்துக்கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் தமன் பேசும்பொழுது தீபாவளிக்குள் கண்டிப்பாக வாரிசு படத்தின் ஒரு சிங்கிள் வெளியாகும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வாரிசு படத்தின் முதல் சிங்கிள் எப்போது வெளியாகும் என்பது கன்ஃபார்ம் ஆகியுள்ளது.