விக்ரமன் மேல இவ்ளோ வன்மமா? வெளியே துரத்த நடக்கும் வேலை! – பிக்பாஸ் சீசன் 6!

பிக்பாஸ் சீசன் 6ல் பங்கேற்றுள்ள விக்ரமனை வெளியேற்றும் வகையில் போட்டியாளர்கள் ஒன்று திரண்டுள்ளனர்.

விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6வது சீசன் பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி தொடங்கி 2 நாட்கள் ஆகிவிட்ட நிலையில் இந்த வார இறுதியில் ஒரு எலிமினேஷன் நடைபெற உள்ளது.

இந்த எலிமினேஷனுக்காக விக்ரமன், ஷிவின், குயின்சி என பலரது பெயர் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. சக போட்டியாளர்கள் நடுவே விக்ரமனை வெளியேற்றும் எண்ணம் அதிகமாக உள்ளது. போட்டியாளர்கள் குறித்த கருத்துகளில் விக்ரமன் மீது அதிகமான நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தன.

அதுபோல சக போட்டியாளர்களால் நாமினேட் செய்யப்பட்ட நபர்களிலும் விக்ரமன் தான் முதல் இடத்தில் உள்ளார். இந்நிலையில் தற்போது நடந்து வரும் கதை சொல்லும் போட்டியில் மற்றவர்களை கதை சொல்ல விடாமல் விக்ரமன் அடிக்கடி சென்று பஸர் அமுக்கியதில் பலருக்கும் அவர் மேல் உடன்பாடு இல்லை என தெரிகிறது.

தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில் விக்ரமன் கதை சொல்ல சென்றபோது அவர் தொடங்கும் முன்னாலேயே மூன்று பஸரையும் போட்டியாளர்கள் அழுத்தி அவரை கதை சொல்ல விடாமல் செய்துள்ளனர். இதனால் இந்த வாரம் விக்ரமன் தான் வெளியேற போகிறார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh