Latest News
இந்தாளு என்ன இவ்வளவு மோசமா இருக்கான்!.. புது ஆதி குணசேகரனை கழுவி ஊத்தும் பெண்கள்!..
தமிழில் உள்ள பிரபலமான டிவி தொடர்களில் முக்கியமான தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் தொடருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். இந்த தொடரின் முக்கிய மையக்கருவே ஆதி குணசேகரன் என்னும் கதாபாத்திரம்தான்.
அனைத்து பெண்களையும் அடிமையாக வைத்திருக்கும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் எப்போதும் எதிர்மறையான விமர்சனத்தை பெற்று வரும். இருந்தாலும் அந்த கதாபாத்திரம்தான் இந்த கதையை கொண்டு போகும் முக்கிய புள்ளியாகும்.
இந்த நிலையில் ஆதி குணசேகரனாக நடித்த நடிகர் மாரிமுத்து இடையில் காலமான நிலையில் அந்த கதாபாத்திரத்தில் நடிகர் வேல ராம மூர்த்தி தற்சமயம் நடிக்க துவங்கியுள்ளார். கடந்த இரண்டு நாட்களாக அவர் வீட்டிற்கு வந்து செய்யும் கொடுமைகளே கதையில் வந்து கொண்டிருக்கிறது.
வந்த வேகத்திற்கு அவர் அனைவரையும் மிகவும் அவமரியாதையாகவும் மோசமாகவும் பேசுவதாக காட்சிகள் அமைந்துள்ளன. கிட்டத்தட்ட மாரிமுத்துவை விடவும் மிகவும் மோசமான ஒரு கதாபாத்திரமாக தற்சமயம் வேல ராமமூர்த்தி நடிக்க துவங்கியுள்ளார்.
இதனை பார்க்கும் பெண்கள் என்ன இந்தாளு இன்னும் மோசமாக இருக்கிறார். இதுக்கு பழைய ஆதி குணசேகரனே பரவாயில்லை என்று முகம் சுளிக்கும் அளவிற்கு அந்த கதாபாத்திரம் அமைந்துள்ளது. போக போக ஆதிகுணசேகரனின் கொடுமைகள் இன்னும் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.