பாரதி ராஜா, வெங்கட் பிரபுவின் புது காம்போ – ஹிட் கொடுக்காம விட மாட்டேன்

தமிழ் இயக்குனர்களின் சிகரம் என அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதி ராஜா. தற்சமயம் பெரும் கதாநாயகர்கள் என அழைக்கப்படும் பலரும் பாரதி ராஜாவில் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர்களே.

இசைஞானி இளையராஜா, பாரதிராஜா, வைரமுத்து மூவருமே அப்போதைய தமிழ் சினிமாவில் ஒரே காலத்தில் வளர்ந்து வந்தவர்கள். பாரதி ராஜா தமிழில் பல வகையான படங்கள் எடுத்து பல ஹிட் கொடுத்தவர். ஆனால் இப்போதைய காலக்கட்டத்தில் அவரது படங்கள் எதுவுமே ஒர்க் அவுட் ஆகவில்லை.

தமிழ் சினிமாவில் இறுதியாக ஒரு ஹிட் படம் கொடுத்துவிட வேண்டும் என ஆசைப்படுகிறார் பாரதி ராஜா. ஏனெனில் அவர் காலத்து இயக்குனரான மணிரத்னம் போன்ற இயக்குனர்கள் இப்போதும் ஹிட் கொடுத்து கொண்டிருப்பதால், அவரும் ஹிட் கொடுக்க ஆசைப்படுகிறார்.

எனவே அடுத்து வெங்கட் பிரபு, ப்ரேம் ஜி என பல பிரபலங்களை அழைத்து தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். அவர்களும் பாரதி ராஜாவிற்கு இதற்காக உதவுவதாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் இவர்கள் கூட்டணியில் தமிழில் அடுத்து ஒரு படம் தயாராக இருக்கிறது.

Refresh