நயன்தாராவின் கணவரும் தமிழ் சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் முக்கியமானவர் ஆவார்.
பெரும்பாலும் விக்னேஷ் சிவனின் திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்றாலும் கூட நயன்தாராவின் கணவர் என்பதால் அவருக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றி படங்களை கொடுத்து விட வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார் விக்னேஷ் சிவன்.
இந்த நிலையில் அவரது மனைவி நயன்தாராவின் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கி வரும் திரைப்படம் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி. இந்த திரைப்படம் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட படம் ஆகும் பெரும்பாலும் விக்னேஷ் சிவனுக்கு காதல் கதை திரைப்படங்கள் வெற்றியை கொடுத்துவிடும்.
வாய்விட்ட விக்னேஷ் சிவன்:
அதனால் காதல் கதை படமாக அவர் முயற்சித்து வருகிறார் இந்த நிலையில் திடீரென்று எக்ஸ் தளத்தில் தன்னுடைய பக்கத்தை டெலிட் செய்திருக்கிறார் விக்னேஷ் சிவன். இதற்கு என்ன காரணம் என்று பார்க்கும் பொழுது சமீபத்தில் விக்னேஷ் சிவன் அஜித் குறித்து கொடுத்த பேட்டி தான் காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசிய விக்னேஷ் சிவன் என்னை அறிந்தால் திரைப்படத்தின் பொழுதே அஜித்துடன் எனக்கு அறிமுகம் கிடைத்தது என்னை அறிந்தால் படத்தின் பாடல் வரிகளை எழுதுவதற்காக நான் சென்றிருந்தேன்.
அப்பொழுது அஜித் என்னிடம் நானும் ரவுடிதான் திரைப்படத்தை பார்த்தேன் சிறப்பாக இருந்தது என்று கூறினார். என்று விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். ஆனால் நானும் ரவுடிதான் திரைப்படம் வெளியாவதற்கு முன்பே என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகிவிட்டது.
அப்படி இருக்கும் பொழுது அந்த சமயத்தில் அஜித் எப்படி நானும் ரவுடிதான் திரைப்படத்தை பார்த்திருக்க முடியும் என்று கூறி விக்னேஷ் சிவனை விமர்சிக்க துவங்கினர். இதுதான் விக்னேஷ் சிவன் எக்ஸ் ஸ்தலத்தை விட்டு வெளியேற முக்கிய காரணமாக இருக்கும் என்பது ரசிகர்களின் அனுமானமாக இருக்கிறது.