Connect with us

சாமியார் படப்பிடிப்பு நடத்துனா 200 நாள் படம் ஓடும்! நம்பிக்கை வைத்து விக்னேஷ் சிவன் செய்த காரியம்!..

lic movie

Latest News

சாமியார் படப்பிடிப்பு நடத்துனா 200 நாள் படம் ஓடும்! நம்பிக்கை வைத்து விக்னேஷ் சிவன் செய்த காரியம்!..

cinepettai.com cinepettai.com

Director Vignesh shivan : இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு வெகு காலங்களாகவே தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் என்பதே கிடைக்காமல் இருந்து வருகிறது. அதிலும் முக்கியமாக அஜித்துடன் இணைந்து திரைப்படங்கள் எடுப்பதாக இருந்து கடைசியில் அஜித் அந்த கதை பிடிக்கவில்லை என்று நிராகரித்த காரணத்தினால் விக்னேஷ் சிவன் வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்தார்.

இந்த நிலையில் தற்சமயம் எல்.ஐ.சி என்கிற திரைப்படத்தை இயக்குவதற்கான வாய்ப்புகளை பெற்றிருக்கிறார் விக்னேஷ் சிவன். இந்த திரைப்படத்தில் எஸ்.ஜே சூர்யா மற்றும் பிரதீப் ரங்கநாதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை கோயம்புத்தூரில் உள்ள ஈஷா யோகா மையத்தில் இருந்து துவங்கலாம் என்று முடிவு செய்தார் விக்னேஷ் சிவன் இந்த நிலையில் நேற்று அங்கு படபிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது. ஏனெனில் விக்னேஷ் சிவன் ஈஷா யோகா மையத்தின் நிறுவரான ஜக்கி வாசுதேவ் மீது அதிக பக்தி கொண்ட கொண்டவர் ஆவார்.

அதனால் அவர் படப்பிடிப்பை வாங்கி வைத்தால் அது படத்திற்கு நல்ல வெற்றியை கொடுக்கும் என்று அவர் நம்புகிறார் எனக் கூறப்படுகிறது அதன்படியே நேற்று படப்பிடிப்பில் ஜக்கி வாசுதேவ் தான் படத்தின் படப்பிடிப்பை துவங்கி வைத்திருக்கிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் எடுத்த எந்த திரைப்படமும் பெரும் வெற்றியை காணவில்லை எனவேதான் விக்னேஷ் இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

POPULAR POSTS

sun tv top cook
vairamuthu
top cook dup cook vadivelu
vijay ajith
actor karthik
aishwarya rajesh
To Top