Latest News
அஜித்துக்கு சொன்ன அட்வைஸ்.. சீரியஸா எடுத்த விஜய்! – தளபதி 66 ஷூட்டிங்கில் மாற்றம்!
விஜய் நடிப்பில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் படம் “தளபதி 66”.
இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கி பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சில நாட்களுக்கு முன்னர் மேலும் சில நடிகர்கள் படத்தில் நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதன்படி, பிரபு, சரத்குமார், சங்கீதா, ஷ்யாம், ஸ்ரீகாந்த் என பெரும் நடிக பட்டாளமே இந்த படத்தில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் ஷூட்டிங்கில் சில மாற்றங்களை செய்துள்ளாராம் நடிகர் விஜய்.
பெரும்பாலும், அஜித், விஜய் போன்ற பெரிய நடிகர்களின் படத்திற்கான் படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத், கொல்கத்தா போன்ற வெளி மாநிலங்களில் நடக்கின்றன. இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு சமீபத்தில் கோரிக்கை விடுத்த ஆர்.கே.செல்வமணி, முடிந்தளவு தமிழ்நாட்டு டெக்னீசியன்களை படங்களில் வேலை செய்ய அனுமதித்தால் அவர்கள் வாழ்வாதாரம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்றார்.
அவர் அஜித்தை குறிப்பிட்டு சொல்லி இருந்தாலும் அதை தனக்கானதுமாக எடுத்துக் கொண்ட விஜய் தற்போது தளபதி 66 பட ஷூட்டிங்கில் தமிழ் டெக்னீசியன்களுக்கு வேலை தருமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் கேட்டுக் கொண்டுள்ளாராம்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்