ரஜினிகாந்த் பாட்டுக்கு விஜய் ஆடுனான்.. அப்பலாம் சுமாராதான் ஆடுவான்!.. வெளிப்படுத்திய பள்ளி நண்பன் சஞ்சீவ்!..

Actor Vijay : தமிழ் சினிமாவில் நடன கலைஞர்கள் பலரும் பிறகு நடிகர்களாகி உள்ளனர். நடிகர் ராகவா லாரன்ஸ் பிரபுதேவா போன்றவர்கள் சினிமாவிற்கு நடன கலைஞர்களாக வந்து அதன் பிறகு அவர்கள் திறமைகள் மூலமாக நடிகர்கள் ஆனார்கள்.

இவர்கள் இருவரை தவிர்த்து தமிழ் சினிமாவில் சிறப்பாக ஆடக்கூடிய நடிகர்கள் என்று பார்த்தால் அதற்கு அடுத்து இருப்பவர் நடிகர் விஜய்தான் சொல்லப்போனால் தமிழ் சினிமாவில் நடன கலைஞராக இல்லாமல் ஒரு நடிகர் சிறப்பாக ஆடக்கூடியவர் என்றால் அது நடிகர் விஜய்.

தெலுங்கு சினிமாவில் விஜய் மாதிரி ஆடுவதற்கு நிறைய பேர் இருந்தாலும் தமிழ் சினிமாவில் விஜய்க்கு இணையாக நடனம் ஆடக்கூடிய இன்னொரு நடிகர் இல்லை என்று கூறலாம். விஜய்க்கு நெருங்கிய நண்பர்கள் என்றால் அவரது பள்ளி நண்பர்கள்தான்.

vijay-1
vijay-1
Social Media Bar

பள்ளி காலம் முதலே அவருடன் படித்து வரும் நண்பர்கள் திரையிலும் நடிகர்களாக இருக்கின்றனர். அவர்களோடு எப்போதும் நெருக்கமான பழக்கத்தில் இருப்பார் விஜய். அப்படி ஒரு நண்பர்தான் நடிகர் சஞ்சீவ்.

நடிகர் சஞ்சீவ் பத்ரி, புதிய கீதை, மாஸ்டர் மாதிரியான சில திரைப்படங்களில் விஜயுடன் சேர்ந்து நடித்திருக்கிறார். எப்பொழுதும் விஜய்யின் நெருங்கிய நண்பராக இவர் இருந்துள்ளார். பள்ளி பருவத்தில் இருவரும் சேர்ந்துதான் படித்தார்களாம். அது குறித்து அவர் ஒரு பேட்டியில் கூறும் பொழுது பள்ளி பருவத்தில் விஜய்க்கு நடனம் ஆடவே வராது.

அப்பொழுது நான்தான் அவனுக்கு நடனம் கற்றுக் கொடுப்பேன் ஒருமுறை பள்ளியில் எஜமான் திரைப்படத்தின் பாடலுக்கு நானும் அவனும் ஆட வேண்டிய சூழ்நிலை இருந்தது. அப்பொழுது அவனுக்கு நான்தான் டான்ஸ் சொல்லிக் கொடுத்தேன். அப்பொழுதும் கூட சுமாராகத்தான் ஆடினான் ஆனால் சினிமாவிற்கு வந்த பிறகு அவன் ஆடுவதை பார்த்து நானே அதிர்ந்து போய் விட்டேன் அந்த அளவிற்கு சிறப்பாக ஆட துவங்கி விட்டான் விஜய் என்று கூறியிருந்தார் சஞ்சீவ்.