தளபதி 68 படத்துக்கு எதுக்கு இந்த பெயர்!.. ரஜினிக்கு திருப்பி அடி கொடுக்க செய்த வேலையா?..

Vijay and Rajinikanth : தமிழில் தொடர்ந்து வெற்றி படங்களாகவே கொடுத்து வருகிறார் நடிகர் விஜய். அவர் நடித்த பீஸ்ட் திரைப்படம் அதிக விமர்சனத்திற்கு உள்ளான பிறகு விஜய் நடிக்கும் திரைப்படங்கள் அனைத்தும் நல்ல வகையில் வரவேற்பு பெற்று வருகின்றன.

கடந்த பொங்கலை முன்னிட்டு விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தில்தான் முதன் முதலாக ரஜினி விஜய் பிரச்சனை துவங்கியது. இந்த படத்தின் வெற்றி விழாவில் பேசிய சரத்குமார் பேசும்போது அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என பேசியிருந்தார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குள்ளானது இந்த விஷயம்.

இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படத்தின் பாடலில் பேரை தூக்க நாலு பேரு, பட்டத்தை தூக்க நூறு பேரு என விஜய்யை கேலி செய்து பாடல் வரிகளை வைத்தார் ரஜினிகாந்த். மேலும் ஜெயிலர் வெற்றி விழாவில் ஒரு காக்கா கழுகு கதை சொல்லி பிரச்சனையை துவங்கி வைத்தார்.

Social Media Bar

அதற்கு பதிலளிக்கும் விதமாக லியோ வெற்றி விழாவில் பேசிய விஜய் யானைக்கு குறி வச்சு சிக்காமல் போனாலும் அது பெரிய சாதனைதான் என ரஜினியை குறிப்பிட்டார். அதற்கு பதிலளிக்கும் வகையில் ரஜினி தற்சமயம் வந்த வேட்டையன் திரைப்படத்தில் குறி வச்சா இறை விழணும் என வசனம் பேசியுள்ளார்.

இந்த நிலையில் தற்சமயம் தனது 68 வது படத்தில் விஜய் நடித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இந்த படத்திற்கு G.O.A.T (Greatest of  All Time) என பெயர் வைக்க உள்ளனராம். ஒரு துறையில் சிறந்து விளங்குபவர்களுக்குதான் இந்த பட்டம் அளிக்கப்படும். ரஜினியை விட தன்னை சிறந்தவராக காட்டி கொள்வதற்காக விஜய் இந்த பெயரை வைத்துள்ளார் என கூறப்படுகிறது.