Connect with us

விஜய் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டா ஷூட்டிங் கேன்சல்தான்!.. கிரிக்கெட் விளையாட போய்டுவாங்க!.. படாதபாடு பட்ட லோகேஷ்!..

vijay friends

Cinema History

விஜய் ஃப்ரெண்ட்ஸ் வந்துட்டா ஷூட்டிங் கேன்சல்தான்!.. கிரிக்கெட் விளையாட போய்டுவாங்க!.. படாதபாடு பட்ட லோகேஷ்!..

Social Media Bar

தமிழ் சினிமா நடிகர்களில் தற்சமயம் அதிக சம்பளம் வாங்கும் டாப் நடிகராக விஜய் இருந்து வருகிறார். விஜய்யின் திரைப்படங்களுக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. வாரிசு திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு விஜய் அடுத்த நடித்து தற்சமயம் வெளியாகி இருக்கும் லியோ திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 200 கோடியை தாண்டி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இந்திய சினிமாவிலேயே இவ்வளவு வசூலை இரண்டே நாட்களில் பெற்ற படம் லியோதான் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நாடகங்களில் பிரபலமான நடிகர் சஞ்சீவ் விஜய்யுடன் ஆன தனது அனுபவத்தை கூறியுள்ளார். இவர் புதிய கீதை பத்ரி போன்ற திரைப்படங்களில் விஜய்யின் நண்பராக நடித்திருப்பார். விஜய்yஉம் சஞ்சையும் நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர்.

வெகு நாட்களுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து மாஸ்டர் திரைப்படத்தில் நடித்தனர். மாஸ்டர் திரைப்படத்தின் படபிடிப்புக்கு செல்லும் பொழுது விஜய் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். தனது பழைய நண்பர்கள் அனைவரும் இந்த படத்தில் இருப்பதை நினைத்து அவர் மகிழ்ச்சியாக இருந்தார்.

Vijay's Master second look poster
Vijay’s Master second look poster

டெல்லியில்தான் அந்த படத்தின் படப்பிடிப்பு நடக்க இருந்தது. அப்போது டெல்லிக்கு சென்ற விஜய் மற்றும் அவரது நண்பர்கள் படப்பிடிப்பிற்கு செல்லாமல் மூன்று நாட்கள் படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்களாம்.

அதன் பிறகு படப்பிடிப்பை முடிக்காமல் ஊர் செல்ல முடியாது என்பதற்காகதான் இறுதியில் படத்தில் நடிக்க வந்தார்களாம் இந்த விஷயத்தை சஞ்சீவ் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

Articles

parle g
madampatty rangaraj
To Top