News
கெட்டது பேசி பணம் சம்பாதிக்கிறாங்க! – யூ ட்யூப் விமர்சகர்கள் குறித்து பேசிய விஜய் சேதுபதி!
இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் பார்க்க வேண்டும் என்றாலே அந்த படத்தின் விமர்சனத்தை பார்த்துவிட்டுதான் படத்தை பார்க்க செல்கிறோம். அந்த அளவிற்கு மக்கள் வாழ்க்கையில் யூ ட்யூப் திரைப்பட விமர்சனங்களுக்கு முக்கிய இடம் இருக்கிறது.

இதுக்குறித்து தற்சமயம் விஜய் சேதுபதி பேசியுள்ளார். கடந்த 15 ஆம் தேதி துவங்கிய சென்னை சர்வதேச திரைப்பட விழா நல்லப்படியாக நடந்து வருகிறது. பல படங்களுக்கு இந்த விழாவில் விருதுகள் வழங்கி வருகின்றனர்.
அந்த வகையில் இந்த வருடம் விஜய் சேதுபதி நடித்து சீனு ராமசாமி இயக்கிய மாமனிதன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது நடிகர் விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.
அப்போது பேசிய விஜய் சேதுபதி ”திரைப்படங்களை பார்க்கும்போது அந்த கதையில் வாயிலாக திரைப்படங்கள் என்ன விஷயங்களை பேசுகின்றன என்பதை புரிந்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான விவாதங்களை செய்யுங்கள். யூ ட்யூப் விமர்சனங்களை பார்த்து படத்தை முடிவு செய்யாதீர்கள். இப்போதெல்லாம் தவறாக பேசினால்தான் யூ ட்யூப் நல்ல வீவ்களை பெறுகிறது. படத்தின் கதை புரிந்துதான் அவர்கள் விமர்சனம் அளிக்கிறார்களா? எனவும் தெரியவில்லை.” என கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
மேலும் விஜய் சேதுபதி விருதுக்காக கொடுத்த பரிசு தொகையை மீண்டும் அவர்களுக்கே நன்கொடையாக கொடுத்துவிட்டார்.
