Connect with us

தளபதி 68 மாஸ் அப்டேட்!.. ரசிகர்கள் சொன்னது உண்மையானது!.. கதையே தெரிஞ்சு போச்சு!.

thalapathy 68 GOAT

Hollywood Cinema news

தளபதி 68 மாஸ் அப்டேட்!.. ரசிகர்கள் சொன்னது உண்மையானது!.. கதையே தெரிஞ்சு போச்சு!.

cinepettai.com cinepettai.com

Thalapathy 68: வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் அடுத்ததாக தயாராகி வரும் திரைப்படம் தளபதி 68. மாநாடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டைம் ட்ராவல் திரைப்படங்களாக எடுக்க வேண்டும் என்பது வெங்கட் பிரபுவின் ஆசையாக இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் இந்த படமும் ஒரு டைம் ட்ராவல் படம் என்றும் ஜெமினி மேன் என்னும் ஹாலிவுட் படத்தின் தழுவலே இந்த படம் என்றும் பேச்சுக்கள் இருந்தன. இந்த படத்தின் பெயர் G.O.A.T (Greatest of All Time) என ரசிகர்கள் மத்தியில் பேச்சுக்கள் உள்ளன.

ஜெமினி மேன் கதைப்படி வயதான கதாநாயகன் சில காரணங்களுக்காக அரசால் தாக்கப்படுவான். அவன் அளவிற்கு சிறப்பாக சண்டை போடுபவர்கள் கிடையாது. எனவே அவனை எதிர்க்க அவனின் இளமை பருவமே எதிரியாக வரும். அதாவது கதாநாயகனை க்ளோன் செய்து அவனை போலவே இன்னொருவனை உருவாக்கி இருப்பார்கள்.

அந்த கதைதான் இந்த படம் என்றால் இதிலும் இரண்டு விஜய் இருப்பார்கள் என்றெல்லாம் பேச்சுக்கள் சென்றுக்கொண்டிருந்த நிலையில் காலையில் இன்று 6 மணிக்கு அப்டேட் உள்ளது என அறிவித்திருந்தார் வெங்கட் பிரபு. அதன் படி அப்டேட்டும் வந்தது.

ரசிகர்கள் அனுமானத்தின்படி உண்மையிலேயே படத்திற்கு G.O.A.T (Greatest of All Time) என்பதுதான் பெயராக உள்ளது. அதே போல ஜெமினி மேன் படத்தில் வருவது போல இரண்டு விஜய் படத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. இந்நேரத்திற்கு ஜெமினி மேன் படத்தை பார்க்க தளபதி ரசிகர்கள் கூடியிருக்க வாய்ப்புள்ளது.

To Top