Cinema History
வெளிநாட்டில் சட்டை இல்லாமல் தவித்த ரஜினிகாந்த்… தக்க சமயத்தில் உதவிய விஜயகாந்த்!..
கற்றோருக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என கூறுவார்கள். ஆனால் பெரிதாக கல்வி எதுவும் இல்லாமலேயே எங்கு சென்றாலும் பெருமையாக பேசப்படும் ஒரு நபராக இருப்பவர் விஜயகாந்த். சினிமா துறையில் யாரிடம் சென்று கேட்டாலும் அவர்கள் விஜயகாந்தை பற்றி நல்லவிதமாகதான் கூறுவார்கள்.
விஜயகாந்த் நடித்து தமிழ் சினிமாவில் பல ப்ளாக் பஸ்டர் திரைப்படங்கள் வந்துள்ளன. தமிழ் சினிமாவிலேயே மிக அதிகமாக ஒரு வருடத்திற்கு 18 படங்களில் கதாநாயகனாக நடித்தவர் விஜயகாந்த். அதே போல தமிழ் சினிமாவில் படத்தில் பணிப்புரியும் ஊழியர்களுக்கு முதன் முதலில் கறி சாப்பாடு போட்டவர் விஜயகாந்த்.
விஜயகாந்த் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது திரைப்படம் ஊழியர்களுக்கு பல உதவிகளை செய்துள்ளார். அவர் நடிகர் சங்க தலைவராக இருந்தபோது சங்கத்தின் அலுவலகம் அடமானத்தில் இருந்தது. எனவே அதை மீட்டெடுக்க ஒரு விழாவை ஏற்பாடு செய்தார் விஜயகாந்த்.
அந்த திரைப்பட விழாவில் கிடைக்கும் பணத்தை வைத்து நடிகர் சங்க அலுவலகத்தை மீட்டெடுக்கலாம் என முடிவு செய்தார். எனவே இதற்காக ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சிக்கு நடிகர் ரஜினியும் வந்தார். நிகழ்ச்சி வெளிநாட்டில் ஏற்பாடானது.
அதற்கு ரஜினி வரும்போது அவரது பெட்டி தவறுதலாக வேறொரு நாட்டுக்கு செல்லும் ஏரோப்ளேனில் சென்றுவிட்டது. இதனால் விழாவில் போட்டுக்கொள்ள சட்டை கூட இல்லாமல் இருந்துள்ளார் ரஜினிகாந்த். அப்போதெல்லாம் ரெடிமேட் கடைகளும் கிடையாது. இதையறிந்த விஜயகாந்த் அவரது சட்டையை எடுத்து கொடுத்துள்ளார்.
அந்த சட்டை ரஜினிக்கு சற்று பெரியதாக இருந்தாலும் சமாளித்துக்கொண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டுள்ளார்.
To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE
தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்