70 காரை வச்சி 15 நாள் நடந்த மாபெரும் சண்டைக்காட்சி!.. விஜயகாந்த் வாழ்க்கையிலேயே பெரும் படப்பிடிப்பு அதுதான்!..

Captain Vijayakanth : தமிழ் சினிமாவில் சரத்குமார், மோகன், சத்யராஜ் போன்ற நடிகர்கள் பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அவர்களுக்கு போட்டியாக களமிறங்கியவர் நடிகர் விஜயகாந்த். சொல்லப்போனால் நடிகர் கமல் ரஜினிகாந்த்திற்கே போட்டியாக இருந்தவர் விஜயகாந்த்.

தொடர்ந்து ஒரே வருடத்தில் 18 திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்த ஒரே தமிழ் கதாநாயகன் விஜயகாந்த் மட்டும்தான். அந்த சாதனையை இப்போது வரை யாராலும் முறியடிக்க முடியவில்லை என்று கூறலாம்.

அப்போது முதல் இப்போது வரை விஜயகாந்த் திரைப்படத்தில் மிகவும் முக்கியமாக மக்களால் பிரபலமாக பார்க்கப்படும் ஒரு விஷயம் என்றால் அது படத்தில் வரும் சண்டை காட்சிகள்.

vijayakanth
vijayakanth
Social Media Bar

விஜயகாந்த் தன்னுடைய படத்தின் சண்டைக் காட்சிகளுக்காக மிகவும் முக்கியத்துவம் கொடுப்பார். அதற்காக தனது உடம்பில் கயிறை கட்டிக் கொண்டு அவர் நடித்தாலும் கூட அவ்வளவு உடல் எடையை ஒரு கயிற்றில் கட்டி தாங்கிக் கொண்டு சண்டையிடுவது என்பது சாதாரண விஷயம் கிடையாது.

ஆனாலும் மக்களுக்காக அதை கஷ்டப்பட்டு செய்யக்கூடியவர் விஜயகாந்த் தன்னுடைய முந்தைய பேட்டியில் ஒரு படத்தின் சண்டைக் காட்சி குறித்து மட்டும் மிகவும் முக்கியத்துவமாக கூறியிருந்தார். ஏ.வி.எம்மின் தயாரிப்பில் உருவான ஒரு திரைப்படத்தில் விஜயகாந்த் நடித்த பொழுது அந்த திரைப்படத்தில் போக்குவரத்துக்கு நடுவே சண்டைகள் நடப்பது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

vijayakanth-2
vijayakanth-2

அதற்காக 70 வண்டிகள் வரவழைக்கப்பட்டன அந்த படபிடிப்பை உடனே முடித்து விடலாம் என்றுதான் ஆரம்பித்தனர். ஆனால் அன்றைய தினம் மழை பெய்த காரணத்தினால் அரை மணி நேரம்தான் படப்பிடிப்பு நடந்தது தொடர்ந்து தினமும் மழை பெய்து வந்ததால் ஒவ்வொரு நாளும் அரை மணி நேரம் ஒரு மணி நேரம்தான் படபிடிப்பு நடந்தது.

வேறு சில தயாரிப்பாளர்களாக இருந்திருந்தால் ஒரு ஐந்து வண்டியை மட்டும் வைத்துக்கொண்டு படத்தை எடுங்கள் என்று கூறி இருப்பார்கள் ஆனால் ஏ.வி.எம் நிறுவனம் கிட்டத்தட்ட 18 நாட்கள் அந்த பட பிடிப்பு நடந்தது அந்த 18 நாட்களுமே 70 வண்டிகளையும் அனுப்பி வைத்தனர் என்று விஜயகாந்த் தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறும் பொழுது நான் நடித்த சண்டை காட்சிகளிலேயே பெரிய சண்டை காட்சி கொண்ட படம் என்றால் அது அந்த காட்சி தான் என்று கூறியிருக்கிறார். இந்த பேட்டி தற்சமயம் பிரபலம் ஆகி வருகிறது.