ஊர் உலகத்துக்காக எல்லாம் வந்து சாரி சொல்லாத!.. நிக்ஸன் பேச்சால் கடுப்பான வினுஷா!..
Biggboss nixen : பிக் பாஸ் நிகழ்ச்சியில் மக்கள் மத்தியில் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளான ஆண் போட்டியாளர்களில் முதல் இடத்தில் இருப்பவர் பிரதீப். அவர் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாக்கப்பட்டார்.
ஆனால் அதற்குப் பிறகு அவரை விடவும் அதிகமாக பெண்கள் மத்தியில் கெட்ட பெயரை சம்பாதித்து இருக்கிறார் நிக்ஸன். பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரை அது ஒருவருக்கு பெரும் புகழையும் ஈட்டி கொடுக்கும் அதே சமயம் அவருக்கு எதிரான விமர்சனத்தையும் உருவாக்கிவிடும்.
இந்த நிலையில் நிக்ஸன் தொடர்ந்து பிக் பாஸில் எதிர்மறையான விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறார். அதிலும் முக்கியமாக வினுஷா தொடர்பாக அவர் பேசிய விஷயம் தான் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. வினுஷாவின் உடல் மற்றும் அழகை விமர்சித்து தவறாக பேசியிருந்தார் நிக்சன்.
இந்த விஷயம் ஆரம்பித்தது முதலே அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர் பொதுமக்கள். இந்த நிலையில் இதற்காக வினுஷாவிடம் நான் மன்னிப்பு கேட்க போகிறேன் என்று கூறி வந்தார் நிக்ஸன். இந்த நிலையில் இன்று எலிமினேஷன் ஆன போட்டியாளர்கள் பலரை பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினராக வரவழைத்திருந்தனர்.
அதில் வினுஷாவும் வந்திருந்தார் நிக்சனும் வந்திருந்தார். அதில் மக்கள் மத்தியில் வினுஷாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதற்காக அங்கு வந்த நிக்சன் அது குறித்து மன்னிப்பு கேட்டார். அப்பொழுது பேசிய வினுஷா நீ பேசிய விஷயத்தை நீ அப்பொழுது தவறு என்று ஒப்புக்கொள்ளவில்லை அதனால் தான் அது பெரிய பிரச்சனையாக மாறியது.
இப்போதும் நீ அந்த விஷயத்தை தவறு என்று ஒப்புக்கொள்கிறாயா என எனக்கு தெரியவில்லை நீ சொன்னது தவறு என்று ஒப்புக் கொண்டால் உனது மன்னிப்பை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் மக்கள் விமர்சிக்கிறார்கள் என்பதற்காக நீ மன்னிப்பு கேட்டால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டார் வினுஷா இருந்தாலும் தன்னை நல்லவன் என்று நிரூபிக்க போராடி வருகிறார் நிக்சன்.