என்னமோ நான் சொன்னப்ப கோபப்பட்டீங்க!.. போய் தோனியை கேளுங்க உண்மை தெரியும்!.. கடுப்பான விஷால்!..

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் நடிகர் விஷாலும் ஒருவர். நடிகராக இருந்த விஷால் அதிக சம்பளம் வந்த பிறகு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் களம் இறங்கினார்.

ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். தற்சமயம் துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் இயக்குனராகவும் களம் இறங்குகிறார் விஷால். இயக்குனர் மிஷ்கினுடன் பிரச்சனை ஆன காரணத்தால் துப்பறிவாளன் 2 படப்பிடிப்பு நின்று போனது.

பிறகு தற்சமயம் அதை விஷாலே இயக்க இருப்பதாக கூறியுள்ளார். இந்த நிலையில் முன்பு ஒரு பேட்டியில் விஷால் பேசும்போது சின்ன பட்ஜெட்டில் படம் எடுக்க வருபவர்கள் தயவு செய்து தமிழ் சினிமாவிற்கு வராதீர்கள். பெரும்பாலும் அந்த படங்கள் ஓடுவதில்லை என கூறியிருந்தார்.

vishal1
vishal1
Social Media Bar

இந்த நிலையில் அது அதிக விமர்சனத்துக்கு உள்ளானது. பலரும் இதற்காக விஷாலை விமர்சனம் செய்தனர். குறைந்த பட்ஜெட் படங்களே வரக்கூடாது என விஷால் எப்படி சொல்லலாம் என்பது அவர்களது கருத்தாக இருந்தது.

இந்த நிலையில் தற்சமயம் ரத்னம் திரைப்படத்திற்காக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய விஷால் அன்று நான் அப்படி சொன்னதற்காக பலரும் கோபப்பட்டார்கள். இப்போது தோனி ஒரு குறைந்த பட்ஜெட் படம் எடுத்தார்.

அது எவ்வளவு வெற்றி கொடுத்தது என அவரை கேட்டு பாருங்கள். எனக்கு சினிமாவில் அனுபவம் உண்டு. நானும் குறைந்த பட்ஜெட் படம் எடுத்து தோல்வி கண்டுள்ளேன். அதனால்தான் அப்படி கூறினேன் என கூறியுள்ளார் விஷால்.