Anime
நருட்டோவை அநாதையாக விட்ட ஹிருசென் சருத்தோபி!.. பின்னாடி இருக்கும் காரணம் இதுதான்.. நருட்டோ ஷிப்புடன்!.
அனிமே ரசிகர்களிடம் தற்சமயம் பிரபலமாகி வரும் ஒரு தொடராகதான் நருட்டோ இருந்து வருகிறது. அதே சமயம் நருட்டோ தொடரை துவங்கும்போதே அதை இவ்வளவு பெரிய தொடராக கொண்டு செல்வதற்கு எந்த ஐடியாவும் இல்லை.
நருட்டோ கிளாசிக்கிற்கும் ஷிப்புடனுக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை பார்த்தாலே அது தெரியும். நருட்டோ க்ளாசிக்கில் ஆசுமாவை எந்த இடத்திலும் ஹிருசென்னின் மகன் என கூறியிருக்கவே மாட்டார்கள்.
இந்த நிலையில் எதற்காக மினாட்டோவின் குழந்தையை ஹிருசென் அனாதையாக விட்டார் என்பது பலருக்கும் விமர்சனத்தை எழுப்பும் கேள்வியாக இருந்து வருகிறது.

அதே போல ஹிடன் லீஃப் வில்லேஜில் உள்ள பலரும் கூட நருட்டோவை ஒதுக்குவதை பார்க்க முடியும். இத்தனைக்கு நான்காவது ஹொக்காகேவின் பையனை ஊர் ஒதுக்குவதற்கு காரணம் என்ன.. இப்படி ஊர்க்காரர்களே கல்நெஞ்சக்காரர்களாக இருக்கிறார்களே என்கிற கேள்வி பலருக்கும் வரும்.
ஆனால் கதையில் இன்னொரு பரிணாமம் உள்ளது. மினாட்டோ பல இடங்களில் பிரச்சனை செய்திருந்ததால் அவரது மகனை மறைவாக வளர்ப்பதுதான் பாதுகாப்பு என முடிவு செய்கிறார் ஹிருசென். அதனால் நருட்டோ நான்காம் ஹொக்காகேவின் பையன் என்பதையே அவர் மறைக்கிறார்.

உண்மையில் ஹிடன் லீஃப் வில்லேஜில் உள்ள அனைவருக்கும் நருட்டோ உடலில் நயன் டெயில் ஃபாக்ஸ் இருப்பது தெரியும். அதனால்தான் அவனை புறக்கணிப்பார்கள். ஆனால் அவன் நான்காம் ஹொக்காகேவின் பையன் என அவர்களுக்கு தெரியாது.
அதே போல மினாட்டோவின் நாமிகாசே க்ளான் பெயரை நருட்டோவிற்கு வைக்காமல் உசுமாக்கி என்கிற அவரது தாயின் துணை பெயரைதான் ஹிருசன் நருட்டோவிற்கு வைத்திருப்பார். அதனால்தான் நருட்டோவை அவர் ஒரு அனாதை போலவே வளர்த்து வந்தார் என கூறப்படுகிறது.
