Connect with us

புது வித மோசடியில் இறங்கியிருக்கும் கும்பல்.. ஆடிப்போன யோகிபாபு..! சென்னை காவல்துறைக்கு வைத்த வேண்டுக்கோள்..

Latest News

புது வித மோசடியில் இறங்கியிருக்கும் கும்பல்.. ஆடிப்போன யோகிபாபு..! சென்னை காவல்துறைக்கு வைத்த வேண்டுக்கோள்..

தொழில் நுட்ப வளர்ச்சிக்கு பிறகு தொடர்ந்து மோசடி வேலைகள் என்பதும் அதிகரித்து இருக்கின்றன. தொடர்ந்து தகவல் தொழில்நுட்பம் தொடர்பான மோசடிகள் என்பது அதிகமாக நடந்து வருகிறது.  இந்தியாவைப் பொறுத்தவரை தொழில்நுட்ப வளர்ச்சிக்கு தகுந்த அளவிற்கு மக்களிடம் அது குறித்த அறிவு என்பது வளரவில்லை.

இன்னமும் கூட ஆண்ட்ராய்டு மொபைல்களை பயன்படுத்துவது எப்படி என்று தெரியாமல் அதை வாங்கி வைத்திருப்பவர்கள் இந்தியாவில் உண்டு. இப்படியாக தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி தெரியாமல் அந்த பொருளை பயன்படுத்தும் பொழுது அவர்களுக்கு நிறைய பிரச்சனைகள் வருகின்றன.

முக்கியமாக இந்த மாதிரியான விஷயங்களை வைத்து ஏமாற்றும் கும்பலிடம் இவர்கள் எளிதாக ஏமாந்து விடுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் யோகி பாபு இதற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு வீடியோ ஒன்று வெளியிட்டு இருந்தார்.

யோகி பாபு வெளியிட்ட வீடியோ:

அதில் அவர் கூறியிருந்த விஷயங்கள் அதிக அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. அந்த வீடியோவில் பேசிய யோகி பாபு கூறும் பொழுது சென்னையில் முதியவர்கள் பலருக்கும் அடிக்கடி ஒரே மாதிரி போன் ஒன்று வருகிறது.

அதில் இந்திய போதை பொருள் தடுப்பு பிரிவிலிருந்து பேசுவதாக கூறி ஒரு நபர் பேசுகிறார். அவர் உங்கள் பெயரில் விமான நிலையத்தில் ஒரு பார்சல் வந்துள்ளது அதில் போதை பொருட்கள் மற்றும் விலங்குகளின் தோல்கள் போன்றவை இருக்கின்றன.

இவை சட்டவிரோதமானவை என்று கூறி அவர்களை பயமுறுத்தி பணம் பறிக்கும் கும்பலாக இருக்கின்றனர். இவர்கள் தங்களை மும்பை போலீஷ் என்று கூறுவது மட்டுமின்றி வீடியோ கால் மூலமாகவும் பேசுகின்றனர் வீடியோ காலில் பேசும் பொழுதும் மும்பை போலீஸ் போன்ற செட்டப்பை போட்டுக்கொண்டு மும்பை போலீசின் சீருடைகளை அணிந்து கொண்டு பேசுகின்றனர்.

இதனால் இது உண்மை என்று பயந்து பலரும் பணத்தை இழக்கின்றனர் ஆனால் இது உண்மை கிடையாது இந்த மாதிரி விஷயங்களை நீங்கள் அணுகும் பொழுது உடனடியாக சென்னை மாநகர காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளவும் என்று கூறியிருக்கிறார் யோகி பாபு. இந்த வீடியோ இப்போது வைரலாக துவங்கியுள்ளது.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Bigg Boss Update

soundarya
vijay sethupathi darsha gupta
anshita
biggboss
manimegalai vj vishal
To Top