ரசிகர்கிட்ட அதை பண்ண கூடாது.. வார்னிங் கொடுத்த சமந்தா.. இந்த மனசு எந்த நடிகைக்கும் இல்ல..!
பொதுவாக சினிமா நடிகைகள் என்றாலே ரசிகர்களை பக்கத்தில் கூட வர விட மாட்டார்கள். சினிமா நடிகர்கள் கூட அவர்களது ரசிகர்களை அழைத்து புகைப்படங்கள் எல்லாம் எடுத்துக் கொள்வார்கள்.
நடிகர் அஜித் கூட நிறைய சமயங்களில் விமான நிலையங்களுக்கு செல்லும் பொழுது அங்கு நிற்கும் ரசிகர்களை அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வதை பார்க்க முடியும்.
அதேபோல நடிகர் ரஜினிகாந்த் படப்பிடிப்பு தளங்களில் பார்க்க வரும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்கு சில நேரங்களை ஒதுக்குவாராம்.
நடிகர்கள் ரசிகர்களுக்கு அந்த அளவிற்கு மதிப்பு கொடுத்தால் கூட நடிகைகள் அந்த அளவிற்கு கொடுப்பது கிடையாது. உதாரணத்திற்கு சமீபத்தில் பிரியங்கா மோகன் குறித்து அதிக சர்ச்சையான விஷயத்தை கூறலாம்.
நடிகை சமந்தா கொடுத்த வார்னிங்:

பிரியங்கா மோகன் சில பொது இடங்களுக்கு சென்ற பொழுது அவரிடம் புகைப்படம் எடுத்துக் கொள்வதற்காக ரசிகர்கள் சிலர் வந்தனர் அவர்களிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்டார பிரியங்கா மோகன்.
இதனால் அப்பொழுது அது அதிக சர்ச்சை ஆனது. ஆனால் இந்த மாதிரியான நடிகைகளில் நடிகை சமந்தா மாறுபட்டவராக இருக்கிறார். சமீபத்தில் ஒரு விழாவில் கலந்து கொண்ட சமந்தா திரும்ப செல்லும் பொழுது அவரை ரசிகர்கள் சூழ்ந்து கொண்டனர்.
அதில் சிலர் ஆட்டோகிராப் கேட்டவாறும் சிலர் புகைப்படம் எடுக்க வேண்டும் என்று கேட்டவாறும் வந்துள்ளனர். இந்த நிலையில் அங்கு நின்ற பௌன்சர்கள் அந்த ரசிகர்களை தள்ளி இருக்கின்றனர். அதனைப் பார்த்த சமந்தா, ரசிகர்களை தொடக்கூடாது அது தவறு என்று பவுன்சர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.
மேலும் அங்கு நின்ற ரசிகை ஒருவருக்கு கையெழுத்தும் போட்டு கொடுத்துவிட்டு சென்றிருக்கிறார் சமந்தா.