எங்களுக்கு தெரிஞ்ச அவதார் அதுதான்!.. சுட்டி டிவி ரசிகர்களுக்கு புது ட்ரீட்!.. நெட்ப்ளிக்ஸ் எடுத்த முடிவு!..

Avatar the Last Airbender: தமிழில் வெகு காலமாக கார்ட்டூன் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு சேனல் இல்லாமல் இருந்தது. அப்போது முதன் முதலாக தமிழில் வந்த கார்ட்டூன் சேனல் சுட்டி டிவி. சுட்டி டிவியை பார்க்காத 90ஸ் கிட்ஸ்கள் இருக்க முடியாது.

சுட்டி டிவி ஆரம்பித்த காலத்தில் அதில் வெளிவந்த பல நிகழ்ச்சிகளை நாம் பார்த்திருப்போம். அதில் டோராவின் பயணங்கள், Jackiechan adventures, He man, ஜு பூம் பாய், போன்ற நிகழ்ச்சிகள் மிக பிரபலமானவை. அப்படி அப்போது பிரபலமாக இருந்த மற்றொரு நிகழ்ச்சிதான் Avatar the last airbender.

அவதார் தொடர் ஐ பூதங்களை அடிப்படையாக கொண்ட கதையாகும். காற்று, நெருப்பு,நீர், நிலம் என நான்கு சக்திகளையும் கொண்ட மக்கள் வாழும் உலகில் ஒவ்வொரு சக்தி கொண்ட மக்கள் மத்தியிலும் அவதார் பிறந்துக்கொண்டே இருப்பார்.

Social Media Bar

அவதாரால் அந்த 4 சக்திகளையும் கட்டுப்படுத்த முடியும். இந்த நிலையில் அடுத்து காற்று தேசத்தில் அவதார் பிறக்க இருக்க, அதை அறிந்த நெருப்பு தேசம் Air benders என்னும் காற்று இனத்தையே அழித்து உலகை அடிமைப்படுத்துக்கிறது. ஆனால் அந்த மொத்த காற்று வீரர்களில் ஒருவன் மட்டும் தப்பிக்கிறான். அவன் தான் ஆங் என்னும் 8 வயது சிறுவன், அவனே அடுத்த அவதார்.

இந்த கதையானது மிகவும் பிரபலமாகி பிறகு திரைப்படமாகவும் வந்தது. இந்த நிலையில் நிஜ மனிதர்களை வைத்து இதை சீரிஸாக வெளியிட உள்ளது நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம்.

அதன் டீசர் ட்ரைலர் தற்சமயம் வெளியாகி உள்ளது.. அதை காண இங்கு க்ளிக் செய்யவும். வருகிற பிப்ரவரி மாதம் இந்த சீரிஸ் வெளியாக உள்ளது. இது தமிழில் வருவதற்கும் வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.