நாயகன் பட நடிகையே கமல் மேல குற்றச்சாட்டு வச்சிருக்காங்க!. தூசி தட்டிய பத்திரிக்கையாளர்!..

kamal haasn actress karthika

Kamal in Nayagan Movie: கடந்த இரண்டு நாட்களாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் விச்சித்ரா சொன்ன ஒரு சம்பவம் தான் தமிழ்நாட்டில் டிரெண்டிங்கான விஷயமாக போய்க்கொண்டிருக்கிறது. தெலுங்கு திரைப்படம் ஒன்றில் நடிப்பதற்காக சென்ற விசித்திராவிற்கு அங்கு பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது.

அதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் அதற்கு எந்த ஒரு பிரபலமும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் தமிழ்நாட்டில் வந்து முறையிட்டு இருக்கிறார் விசித்திரா. ஆனால் தமிழ்நாடு நடிகர் சங்கமும் அவருக்கு எந்த உதவியும் செய்யாத காரணத்தினால் அடுத்ததாக நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

kamal bigboss
kamal bigboss

அப்படியும் நீதி கிடைக்காத காரணத்தால் சினிமாவை விட்டு விலகி சென்று இருக்கிறார் விசித்ரா. இந்த விஷயத்தை அவர் பேசிய பிறகு கூட சமூக வலைதளங்களில் எந்த ஒரு நடிகரும் அவருக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை பாடகி சின்மயி மட்டும் விசித்திராவிற்காக பேசியிருந்தார்.

திரிஷாவிற்கு குரல் கொடுத்த இத்தனை பேரும் ஏன் விசித்திராவை கண்டு கொள்ளவில்லை என்கிற ஒரு சந்தேகம் இயற்கையாகவே பலருக்கும் தோன்றியுள்ளது. இந்த நிலையில் இது குறித்து பேசிய பிரபல சினிமா பத்திரிகையாளரான செய்யாறு பாலு கூறும் பொழுது கமல்ஹாசனே இப்படி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார்.

நாயகன் படம் வெளியான நேரத்தில் அந்த திரைப்படத்தில் அவருடன் நடித்தவர் கிருத்திகா என்கிற நடிகை. அவர் கமலுக்கு மகளாக நடித்திருப்பார் அவர் 10 வருடங்களுக்கு முன்பு ஒரு ஆங்கில பத்திரிக்கையில் பேட்டி கொடுக்கும் பொழுது நான் கமலுக்கு உடன்படாத காரணத்தினால் நாயகன் திரைப்படத்தில் ஒரு காட்சியில் என்னை நிஜமாகவே அடித்தார் கமல்ஹாசன் என்று கூறியிருக்கிறார்.

என்று இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார் செய்யாறு பாலு. இதனை அடுத்து கமல்ஹாசன் மேலேயே இவ்வளவு பிரச்சனைகள் இருக்கிறதா என்று கேள்விகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் கமல்ஹாசன் எப்படி இன்று விசித்திராவிடம் இது குறித்து பேச போகிறார் என்பதும் சஸ்பெனசாகவே இருக்கிறது.

Reference