அரசின் நிஜ முகத்தை தோலூரித்த கூஸ் முனுசாமி வீரப்பன் தொடர்… இதுக்கெல்லாம் தனி தில்லு வேணும்பா!..

தமிழ்நாட்டில் பெரும் சம்பவங்களை நிகழ்த்திய குற்றவாளிகளில் இந்தியா முழுக்க பிரபலமாக அறியப்படுபவர் சந்தனக்கடத்தல் வீரப்பன். சத்தியமங்கலம் காட்டு பகுதியில் வாழ்ந்து வந்த வீரப்பனை பிடிப்பதுதான் 36 வருடங்களாக அரசுக்கே சவாலாக இருந்தது.

இதுவரை தமிழ்நாடு அரசு ஒரு கைதியை பிடிப்பதற்கு செலவு செய்த தொகையிலேயே வீரப்பனை பிடிக்கதான் 700 கோடி வரை செலவு செய்திருக்கிறது. வீரப்பன் குறித்து Hunt for Veerappan என்னும் தொடரை எடுத்தது நெட்ப்ளிக்ஸ் நிறுவனம். அதில் வீரப்பன் குழுவில் இருந்த ஆட்கள். வீரப்பனை பிடிப்பதில் பணிப்புரிந்த காவலர்கள் என பலரிடம் திரட்டிய தகவல்களை கொண்டு அந்த சீரிஸ் எடுக்கப்பட்டது.

எனவே இரு தரப்பினரும் வீரப்பன் மற்றும் அரசால் சந்தித்த பிரச்சனைகளை கூறியிருந்தனர். இந்த சீரிஸிற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வீரப்பன் குறித்து வேறொரு பார்வையில் அதே கதையை அணுகியுள்ளது சீ5 நிறுவனம். வீரப்பன் காட்டுக்குள் இருந்தப்போது பலமுறை அவர் பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலுக்கு பேட்டி கொடுத்துள்ளார்.

veerappan
veerappan
Social Media Bar

வீரப்பன் முகத்தை முதன் முதலில் உலகுக்கு காட்டியவர் நக்கீரன் கோபால்தான். இந்த நிலையில் அவர் எடுத்த பேட்டி வீடியோக்களை கொண்டு நெட்ஃப்ளிக்ஸ் காட்டாத சில பளிச்சிடும் உண்மைகளை இந்த தொடர் காட்டியுள்ளது. இதனுடன் ஒப்பிடும்போது ஒரு மேம்போக்கான டாக்குமெண்ட்ரி சீரிஸாகவே நெட்ஃப்ளிக்ஸ் சீரிஸ் தெரிகிறது.

வீரப்பன் நல்லவர் கிடையாது என்பது அனைவரும் அறிந்த விஷயமே.. ஆனால் வீரப்பன் செய்ததை விடவும் அதிக மடங்கு கொலைகளையும் அநியாயங்களையும் அரசு செய்திருக்கிறது. அவை அனைத்தையும் ஆதாரத்துடனும், வீரப்பனே கூறிய வாக்குமூலம் மூலமும் இந்த சீரிஸ் கலைகிறது.

40 பழங்குடியின பெண்கள் ஒரே சமயத்தில் காவலர்களால் கெடுக்கப்பட்டனரே அதற்கு உங்கள் அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுத்தது என வீரப்பன் கேட்கும்போதுதான் ஏன் வீரப்பனுக்கு இவ்வளவு நபர்கள் ஆதரவாக இருந்துள்ளனர் என தெரிகிறது.

goose munisamy veerappan
goose munisamy veerappan

முக்கியமாக அப்போது முதலமைச்சராக இருந்த செல்வி ஜெ.ஜெயலலிதாவே இதற்கு காரணம் என வெளிப்படையாக கூறியுள்ளார் வீரப்பன். ஒரு குற்றவாளியாக வீரப்பன் செய்தது பெரும் குற்றம் எனும்போது அதைவிட அரசு காவலர்கள் செய்த குற்றம் பெரியது இல்லையா. என்ற கேள்வியை இந்த சீரிஸ் ஏற்படுத்துகிறது.

மொத்தமாக கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசின் மறைக்கப்பட்ட முகத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது கூஸ் முனுசாமி வீரப்பன். தற்சமயம் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த சீரிஸின் இரண்டாம் பாகமும் வரவிருக்கிறது.