எனிமி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் விஷால் நடிக்கும் முக்கியமான திரைப்படம் லத்தி.

இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் சுனைனா இருவரும் முக்கிய கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். ஏற்கனவே நடிகர் விஷால் சுனைனாவுடன் சமர் என்கிற படத்தில் நடித்தார். ஆனால் அந்த திரைப்படத்தில் சுனைனா பெரிய கதாபாத்திரமாக இடம் பெறவில்லை.
எனவே இந்த படத்தில் அவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது.
வினோத்குமார் என்னும் புதிய இயக்குனர் இந்த படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார். ரானா ப்ரொடக்ஷன் இந்த படத்தை தயாரிக்கிறது.

இந்த படம் முழுக்க முழுக்க க்ரைம் ஸ்டோரியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதில் விஷால் போலீஸ் கதாபாத்திரமாக இருக்கிறார். நடிகர் விஷாலுக்கு இது முதல் பேன் இண்டியா திரைப்படமாகும். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடா, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இந்தியா முழுவதும் வெளியாக இருக்கிறது.

எனவே இந்த திரைப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பு இருந்து வருகிறது. இந்நிலையில் இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12 அன்று வெளியாகும் என நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதன் போஸ்டர்கள் தற்சமயம் வைரலாகி வருகின்றன.







