Actress
துபாயில் கவர்ச்சி புகைப்படங்கள் வெளியிட்ட பிரியங்கா மோகன்
தமிழில் டான், எதற்கும் துணிந்தவன், டாக்டர் ஆகிய திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலக ரசிகர்களிடையே பிரபலமாகி இருக்கும் நடிகை பிரியங்கா மோகன் ஆவார்.

பொதுவாக குழந்தைகளை போல க்யூட் ரியாக்சன்களை முகத்தில் கொண்டுள்ளதால் இவருக்கும் குறுகிய காலத்திலேயே பெரிய ரசிகர் வட்டம் உருவாகி விட்டது. இதனால் அதிகமான பட வாய்ப்புகளை பிரியங்கா மோகன் பெற்று வருகிறார்.

பொதுவாக இவர் இதுவரை நடித்த படங்களில் க்ளாமரான உடைகள் அணிந்து நடித்ததில்லை. மாடர்ன் ஆடை உடுத்தினாலும் கூட கவர்ச்சி காட்டாத ஆடைகளையே உடுத்துவதுண்டு.

இந்நிலையில் தற்சமயம் துபாய் சென்ற பிரியங்கா மோகன் கவர்ச்சியான உடையில் போட்டோக்கள் வெளியிட்டுள்ளார். கவர்ச்சி உடையிலும் அவர் அழகாகவே இருக்கிறார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.
