காசு வேணும்னாலும் தரேன் அந்த வரிகளை மட்டும் மாத்துங்க!.. கண்ணதாசனை கதற வைத்த எம்.எஸ்.வி..

Kannadasan and MSV : கண்ணதாசனும் எம்.எஸ்.வியும் எவ்வளவு நெருங்கிய நண்பர்கள் என்பது பலருக்கும் தெரிந்த விஷயமாகும். கண்ணதாசன் இறந்த சமயத்தில் தனது தாய் இறந்தப்போது எப்படி அழுதாரோ அப்படி அழுதார் எம்.எஸ்.வி என அவரது மகனே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

எம்.எஸ்.வி சும்மா தனியாக இருக்கும்போதெல்லாம் போய் கண்ணதாசனை இம்சை செய்வதை வாடிக்கையாக கொண்டிருந்தார். இப்படி இருக்கும்போது எம்.எஸ்.வி ஒரு இசை போட அதற்கு எப்படி வரிகள் எழுதுவது என்றே கண்ணதாசனுக்கு தெரியவில்லை.

Social Media Bar

எனவே அவர் எம்.எஸ்.வியிடம் எனக்காக இந்த இசைக்கு ஏற்றமாதிரி ஒரு பாடல் வரியை பாடு பார்ப்போம் என கூறினார். உடனே எம்.எஸ்.வி “இன்று முதல் குடிக்க மாட்டேன், சத்தியமடி தங்கம், இன்னைக்கு ராத்திரிக்கு தூங்க வேணும், ஊத்திக்கிறேன் கொஞ்சம்” என பாடினார்.

அதனை கேட்ட கண்ணதாசன் உடனே தனது பையில் இருந்த 10 ரூபாயை கொடுத்து எந்த ஒரு குடிக்காரனும் இன்னையோட குடியை விடுறேன்னு சொல்ல மாட்டான். நாளைல இருந்து விடுறேன்னுதான் சொல்லுவான். அதுனால இதை வச்சிக்கிட்டு பாடல் வரியை மாத்தி எழுது என கூறியுள்ளார் கண்ணதாசன்.

இந்த நிகழ்வை எம்.எஸ்.வி முன்பு பேசிய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார்.