Connect with us

விஷாலின் ஏமாற்று வேலையை நம்பிடாதீங்க!.. சினிமாக்காரங்களுக்கு ஏமாத்துறதுதான் வேலையே!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

vishal

Latest News

விஷாலின் ஏமாற்று வேலையை நம்பிடாதீங்க!.. சினிமாக்காரங்களுக்கு ஏமாத்துறதுதான் வேலையே!.. கடுப்பான பத்திரிக்கையாளர்…

cinepettai.com cinepettai.com

Vishal: திரைப்பட பிரபலங்கள் கொடுக்கும் வாக்குறுதிகள் குறித்து கடும் விமர்சனத்தை அளித்திருக்கிறார் பிரபல சினிமா பத்திரிகையாளரான அந்தணன்.

சமீபத்தில் விஜயகாந்தின் நினைவேந்தல் விழா நடிகர் சங்கம் சார்பாக நடத்தப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் மற்றும் விஜயகாந்தின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் இந்த விழாவில் பேசிய பலரும் விஜயகாந்த் குறித்த நல்ல விஷயங்களை பேசி வந்தனர்.

இதற்கு நடுவே வந்த விஷால் இன்னும் ஒரு படி மேலே போய் விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியனுக்கு சினிமாவில் தன்னுடன் சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பளிப்பதாக கூறியிருந்தார். இது குறித்து தற்சமயம் ஒரு வீடியோவில் பேசிய அந்தணன் கூறும்பொழுது தமிழ் சினிமாவை பொறுத்தவரை வாக்குறுதி என்பது வெறும் மேடையில் பேசும் விஷயம் மட்டுமே,

vishal
vishal

அதற்கு பிறகு அதற்கு எந்தவித மதிப்பும் கொடுப்பது கிடையாது உதாரணமாக கில்லி படத்தின் இசை வெளியீட்டு விழாவின் பொழுது ஒரு சிறுமி மிக அற்புதமாக பாடல் பாடுவதை பார்த்த படத்தின் இயக்குனரான  தரணி கூறும் போது அந்த பெண்ணுக்கு அடுத்த படத்தில் பாடுவதற்கு வாய்ப்பு வாங்கி தருவேன் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த பெண்ணுக்கு அவர் பிறகு எந்த வாய்ப்பும் தரவில்லை அதேபோல விஸ்வரூபம் திரைப்படம் வெளியான சமயத்தில் ஒரு நபர் அந்த படத்தின் பாடலை சிறப்பாக பாடியிருப்பதை அறிந்து கமல்ஹாசன் அந்த நபரை தேடிப்பிடித்து, அவருக்கு அடுத்து வரும் தனது படத்தில் வாய்ப்பு கொடுப்பதாக கூறினார்.

ஆனால் கமலும் அவருக்கு எந்த வாய்ப்பும் கொடுக்கவில்லை. இப்படி சினிமாவில் உணர்ச்சிவசப்பட்டு அப்போது பப்ளிசிட்டிக்காக பேசும் பிரபலங்கள் பிறகு அதை செய்வது கிடையாது, அந்த வகையில் விஷாலும் பேசி இருப்பதை செய்ய மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் சண்முக பாண்டியன் இப்போதுதான் சினிமாவிற்கு புதிதாக வருவது போல விஷால் பேசுகிறார். ஏற்கனவே சகாப்தம் என்கிற திரைப்படத்தின் மூலமாக சண்முக பாண்டியன் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி விட்டார். இன்னும் சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார் அப்போதெல்லாம் அவருக்கு ஆதரவு தெரிவிப்பதற்கு விஷாலுக்கு நேரம் கிடைக்கவில்லையா இப்போது மட்டும் வந்து வாய்ப்பு அளிக்கிறேன் என்று பேசுகிறார் என்று கேள்வி எழுப்பி இருக்கிறார் அந்தணன். 

POPULAR POSTS

shivani narayanan
dhanush suchitra
sivaji sowcar janaki
demon slayer hasira training arc 1
gangai amaran ilayaraja
jio cinema
To Top