Ilayaraja: பண்ணைப்புரத்திலிருந்து கனவுகளோடு சென்னைக்கு வந்த இரு இளைஞர்களின் கனவுதான் தமிழ் சினிமாவில் இசையாக மாறியது. அந்த இளைஞர்கள்தான் இளையராஜாவும் கங்கை அமரனும், இளையராஜாவின் நிஜ பெயர் ஞானதேசிகன் என்று கூறப்படுகிறது.
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு மிகவும் கஷ்டப்பட்டு வந்தார் இளையராஜா. எங்கெல்லாம் பாடல் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதோ அங்கெல்லாம் சின்ன சின்ன தொகைக்கு பாடல் பாடி வந்தார். அந்த வகையில் கட்சி போராட்டங்கள் போன்ற விஷயங்களில் கூட பாடல்கள் பாடினார்.
அப்படியாக அவர் பாடிய பாடல்கள்தான் அவருக்கு வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தது. அங்குதான் கதை ஆசிரியர் ஆர் செல்வராஜுடன் இவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. ஆர் செல்வராஜ் அன்னக்கிளி, 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் என பல படங்களுக்கு கதை வசனம் எழுதியவர்.

அவர் மூலமாகத்தான் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அன்னக்கிளி படத்திற்காக முதலில் இவர்கள் போய் சந்தித்தது சினிமா பிரபலம் பஞ்சு அருணாச்சலம் அவர்களைதான், பஞ்சு அருணாச்சலத்திடம் இளையராஜா சில நாட்கள் உதவியாளராக பணிபுரிந்தார்.
அப்புறம்தான் அன்னைக்கிளி திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பை வாங்கி கொடுத்தார். அன்னக்கிளி திரைப்படத்தில் சேரும் பொழுது உனக்கென ஒரு பெயரை வைத்துக் கொள், அந்தப் பெயர்தான் கடைசி வரைக்கும் நிலைத்து நிற்கும் என்று இளையராஜாவிடம் கூறியிருக்கிறார் பஞ்சு அருணாச்சலம்.
இளையராஜாவும் யோசித்து எனது பெயரை ராஜா வைத்து விடலாமே என்று கூறியிருக்கிறார் அதற்கு பதில் அளித்த பஞ்சு அருணாச்சலம் ஏற்கனவே ஏ.எம் ராஜா என்கிற பிரபலமான இசையமைப்பாளர் ஒருவர் இருக்கிறார் எனவே நீ வெறும் ராஜா என்று வைத்துக் கொள்வதற்கு இளையராஜா என்று வைத்துக்கொள்.
ஏனெனில் நீ இளமையுடன் இப்பொழுதுதான் இசைக்குள் வந்திருக்கிறாய் என்று கூறியிருக்கிறார் எப்படி இளைய தளபதி என்கிற பெயர் விஜய்க்கு வந்ததோ அப்படித்தான் இளையராஜா என்கிற பெயர் இவருக்கு வந்துள்ளது.