விரைவில் அரசியல் கட்சி துவங்க வேண்டும்!..  அவசரமாக ஆலோசனை கூட்டத்தை கூட்டிய விஜய்!..

Actor Vijay: அரசியலில் கால் பதிக்க வேண்டும் என்பது நடிகர் விஜய்க்கு வெகுநாட்களாகவே ஆசையாக இருந்து வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக அதற்கான வேலைகளில் ஈடுப்பட்டு வருகிறார். கடந்த உள்ளாட்சி தேர்தல்களில் கூட  விஜய் மக்கள் இயக்கம் சார்பாக ஒவ்வொரு தொகுதியிலும் சுயேட்சையாக ஆட்களை நிற்க வைத்தனர்.

விஜய் மக்கள் இயக்கத்தில் உள்ள மகளிர் அணி, இளைஞரணி, வழக்கறிஞர் அணி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியை சேர்ந்த நிர்வாகிகளுக்கு இன்று விஜய் அழைப்பு விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 150க்கும் அதிகமான நிர்வாகிகள் இன்று சென்னை வந்து சேர்ந்தனர்.

Social Media Bar

இந்த நிலையில் சென்னை பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று ஆலோசனை துவங்கியது. அடுத்து நாடாளு மன்றம் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதன் மீது கவனம் செலுத்த துவங்கியுள்ளார் நடிகர் விஜய்.

விஜய் மக்கள் இயக்கத்தை விரைவில் அவர் அரசியல் கட்சியாக மாற்ற உள்ளதாக ஏற்கனவே பேச்சுக்கள் இருந்து வருகின்றன. எனவே நாடாளுமன்ற தேர்தலிலேயே போட்டியிடலாமா அல்லது சட்டமன்ற தேர்தல் வரை காத்திருக்கலாமா என்பது குறித்துதான் இன்று ஆலோசனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.