rajinikanth vidhyasagar

வார்த்தைகளே இல்லாமல் வார்த்தை வச்சி பாட்டு போடு!.. ரஜினி படத்தில் சிக்கிய பாடலாசிரியர்!.. எந்த பாட்டு தெரியுமா?

Cinema History Tamil Cinema News

Music Director Vidhyasagar: கோலிவுட்டில் பிரபலமான இசையமைப்பாளர்களில் முக்கியமானவர் வித்யாசாகர். 90ஸ் கிட்ஸ்களில் அவரது பாடல்களை பாடாதவர்கள் இருக்கவே முடியாது. அதிலும் கில்லி படத்தில் அவர் இசையமைத்த பாடல்கள் இப்போது வரை மக்கள் மத்தியில் பிரபலமாகவே இருந்து வருகிறது.

வித்யாசாகர் மூலமாக சினிமாவில் வளர்ந்த பாடலாசிரியர்கள் பலர். இதுக்குறித்து பிரபல பாடலாசிரியர் பா.விஜய் ஒரு பேட்டியில் தனது அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார். அவர் கூறும்போது வித்யாசாகர் மிகவும் தனித்துவமாக நம்மிடம் பாடல் வரிகளை கேட்பார். ஆனால் அந்த பாடல் வரிகளை நாம் எழுதுவதற்கு கடினமாக இருந்தாலும் அவைதான் நமக்கு பேரையும் புகழையும் பெற்று தரும்.

வித்யாசாகர் சந்திரமுகி திரைப்படத்திற்கு இசையமைத்தப்போது அதில் பாடல் வரிகள் எழுதுவதற்கான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. அதில் ஒரு பாடல் வரிகளுக்கான சூழ்நிலையை அவர் கூறும்போது பாடல் வழியாகவே பாடலின் பெருமையை கூறும் ஒரு பாடல் இது. இதன் துவக்கம் அர்த்தமுள்ள வார்த்தைகளை கொண்டு துவங்க கூடாது.

அர்த்தமற்ற வார்த்தைகள் அதாவது தமிழ் வார்த்தைகள் இல்லாமல் இந்த பாடல் துவங்க வேண்டும். ஆனால் அதன் வழியே நாம் ஒரு அர்த்தத்தை கூற வேண்டும் என கூறினார் வித்யாசாகர். இப்படி ஒரு பாடல் வரியை எப்படி எழுதுவது என நானும் பல மணி நேரங்கள் யோசித்தேன்.

அதன் பிறகு நான் எழுதிய பாடல் வரிகள்தான் அத்திந்தோம் திம்தியும்தன திந்தாதி திந்தோம். அர்த்தமற்ற வார்த்தைகளை கொண்டு கூட ஒரு அர்த்தத்தை கூற முடியும் என்பதை அன்றுதான் தெரிந்துக்கொண்டேன் என கூறுகிறார் பா.விஜய்.