Trisha Krishnan: தொடர்ந்து தமிழ் சினிமா நடிகைகளில் சர்ச்சைக்கு உள்ளாகி வரும் நடிகையாக த்ரிஷா இருக்கிறார். ஏற்கனவே மன்சூர் அலிக்கான் பேசியப்போதும் அதில் த்ரிஷா குறித்து அவர் கீழ்த்தரமாக பேசியதாக கூறி பெரும் பஞ்சாயத்து ஆனது.
இந்த நிலையில் தற்சமயம் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஏ.வி ராஜு சர்ச்சையை கிளப்பும் சில விஷயங்களை பேசியிருந்தார். அதில் அவர் பேசும்போது அதிமுக எம்.எல்.ஏ வெங்கடாச்சலம் த்ரிஷாவை அடைய ஆசைப்பட்டதாகவும் இதனால் 25 லட்ச ரூபாயை நடிகர் கருணாஸிற்கு அளித்து த்ரிஷாவை அழைத்து வர சொன்னதாகவும், கருணாசும் அதே போல அழைத்து வந்ததாகவும் பேசியிருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. திரைத்துறையை சேர்ந்த நபர்களில் இயக்குனர் சேரன் மட்டுமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார். வேறு யாருமே அவர் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நடிகை த்ரிஷா கூட இதற்கு பதில் தெரிவிக்காமல் இருந்தார்.

இந்த நிலையில் ஏன் திரைத்துறை இப்படி கள்ள மௌனம் காக்கிறது என்பதே பலரது கேள்வியாக இருந்தது. இந்த நிலையில் தற்சமயம் த்ரிஷா இதற்கு பதிலளித்துள்ளார். அதில் அவர் கூறும்போது ”மற்றவர்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக கீழ்தரமான செயல்களைச் செய்யும் கீழ்தரமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டி இருப்பது அருவருப்பாக இருக்கிறது.

இதுக்குறித்து சட்ட ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என பதிலளித்துள்ளார் த்ரிஷா.






