Connect with us

யாருமே அந்த சீன் டூப்புன்னு கண்டுப்பிடிக்கல!.. அதான் எனக்கு பெருமை!.. சுந்தர் சி படத்தில் யாருமே கவனிக்காத விஷயம்!..

sundar C

Cinema History

யாருமே அந்த சீன் டூப்புன்னு கண்டுப்பிடிக்கல!.. அதான் எனக்கு பெருமை!.. சுந்தர் சி படத்தில் யாருமே கவனிக்காத விஷயம்!..

cinepettai.com cinepettai.com

Director Sundar C : தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சுராஜும் பின் நாட்களில் காமெடி திரைப்படங்கள் எடுத்தாலும் கூட சுந்தர் சி அளவிற்கு அந்த திரைப்படங்கள் எதுவும் நகைச்சுவையாக இருக்கவில்லை.

மேலும் அந்த அளவிற்கு பிரபலமும் அடையவில்லை. சுந்தர் சி சில சமயங்களில் ஆக்ஷன் திரைப்படங்களும் எடுப்பதுண்டு. அப்படியாக அவர் ஆக்சன் என்கிற பெயரிலேயே ஒரு திரைப்படத்தையும் எடுத்தார். அந்த திரைப்படம் பெரும் தோல்வியை கண்டது.

sundar-c
sundar-c

இந்த திரைப்படத்தில் விஷால் மற்றும் தமன்னா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சுந்தர் சி யை பொருத்தவரை அவர் சண்டை திரைப்படங்களை எடுக்கும் பொழுது அது வெகுவாக மக்கள் மத்தியில் பிரபலமாகாது.

ஆக்‌ஷன் படத்தில் செய்த வேலை:

ஆனால் காமெடி திரைப்படங்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் வரவேற்பை பெறும். இந்த நிலையில் ஆக்ஷன் திரைப்படத்தில் விஷாலுக்கு போடப்பட்ட மேக்கப்பில் துவங்கி நிறைய விஷயங்கள் சரியாக செய்யப்படவில்லை. அதனால் இந்த படம் வெகுவாக மக்கள் மத்தியில் விமர்சனத்திற்கு உள்ளானது.

இது குறித்து சுந்தர் சி சொல்லும் பொழுது படத்தில் 2000 தவறுகளை கூட மக்கள் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் அவர்கள் கண்டுபிடிக்காத விஷயம் ஒன்று உள்ளது அந்த திரைப்படத்தில் ஒரு விமானத்தை துரத்தும் காட்சி ஒன்று இருக்கும்.

அந்த காட்சி முழுக்க முழுக்க பொய்யாக உருவாக்கப்பட்டது நாங்கள் விமான நிலையத்தில் அனுமதி கேட்டு சென்ற பொழுது விமானத்தை ஓட்டி எல்லாம் படப்பிடிப்பை நடத்த முடியாது என்று கூறிவிட்டார்கள். நிற்கும் விமானத்தில் எப்படி வேண்டுமானாலும் படபிடிப்பை நிகழ்த்திக் கொள்ளுங்கள் என்று கூறிவிட்டனர்.

மேலும் விமான நிலையமும் படத்தில் காட்டப்பட்ட அளவு பெரிதாக இல்லை இந்த நிலையில் நாங்கள் வேலை பார்த்து அப்படியான ஒரு விஷயத்தை உருவாக்கி அதை படத்தில் காண்பித்தோம். ஆனால் அது பொய் என்று இப்போது வரை யாருமே கண்டுபிடிக்கவில்லை. அந்த விஷயத்தில் ஒரு இயக்குனர் என்பதில் நான் பெருமைப்படுகிறேன் என்று கூறியிருக்கிறார் சுந்தர் சி.

POPULAR POSTS

gv prakash
jonita
ajith
lingusamy kamalhaasan1
karthik subbaraj
To Top