வேற ஆளுக்கு படம் பண்ண போறீங்களா!.. அப்ப எனக்கு கதை சொல்லாதீங்க!.. வெற்றிமாறனிடம் கடுப்பான தனுஷ்!..
Vetrimaaran and Dhanush: வெற்றிமாறன் தமிழ் சினிமாவில் வளர துவங்கிய சமகாலத்தில்தான் தனுஷும் சினிமாவில் வளர்ச்சியை கண்டு வந்தார். வெற்றிமாறன் திரைப்படத்தில் நடிக்கும் போது தனுஷிற்கு அது அதிகம் வரவேற்பு பெற்றுக்கொடுத்தது.
அதேபோல வெற்றிமாறனுக்கும் ஒரு முக்கியமான கதாநாயகனாக தனுஷ் இருந்தார். அதனால் இதுவரை வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான திரைப்படங்களில் தனுஷை வைத்து எடுத்த படங்கள்தான் அதிகம். பொல்லாதவன் திரைப்படத்தின் வெளியிட்டுக்கு பிறகு வெற்றிமாறன் திரைப்படத்தில்தான் நடிக்க வேண்டும் என்று தனுஷ் முடிவு செய்துவிட்டார்.

அதற்குப் பிறகு தனுஷை வைத்து ஆடுகளம் என்கிற திரைப்படத்தை எடுத்தார் வெற்றி மாறன். அந்த திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது மேலும் பல பெரும் வெற்றியை அந்த திரைப்படம் பெற்றது. மீண்டும் தனுஷ்காக சூதாடி என்கிற ஒரு கதையை எழுதினார் வெற்றிமாறன்.
வெற்றிமாறனுக்கு வந்த சோதனை:
அந்த கதையை திரைப்படமாக்கும் பொழுது அது வெற்றிமாறனுக்கே கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஏனெனில் அந்த கதை கிட்டத்தட்ட ஆடுகளம் படத்தின் கதையோடு ஒத்து இருந்தது. எனவே இந்த திரைப்படம் வேண்டாம் வேறு ஏதாவது திரைப்படம் எடுக்கலாம் என்று தனுஷிடம் கூறிய வெற்றிமாறன் என்னிடம் வேறு ஒரு கதை இருக்கிறது.
அதை வேறு நாயகர்களை வைத்து எடுக்க நினைக்கிறேன் என்று கூறியிருக்கிறார் உடனே தனுஷும் சரி நான் அந்த படத்தை தயாரிக்கிறேன் என கூறியுள்ளார்.

அந்த படத்தின் கதையை வெற்றிமாறன் சொல்வதற்கு முயற்சித்தப்போது இல்லை வேண்டாம் கதை நன்றாக இருந்தால் அதில் நடிக்க வேண்டும் என எனக்கு ஆசை வந்துவிடும் என கூறியிருக்கிறார் தனுஷ். அந்த கதைதான் பிறகு விசாரணை என்கிற பெயரில் படமாக வெளியானது.
அந்த அளவிற்கு தனுஷிற்கும் வெற்றிமாறனுக்கும் இடையே ஆழமான நட்பு இருந்தது என கூறுகிறார் வெற்றிமாறன்.