Connect with us

சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!

dune 2 patient

Hollywood Cinema news

சாகுறதுக்கு முன்னாடி அந்த படத்தை பாக்கணும்..! ரசிகரின் கடைசி ஆசைக்காக போராடிய ஹாலிவுட் இயக்குனர்!

cinepettai.com cinepettai.com

ஒரு திரைப்படம் தியேட்டரில் வெளியாவதற்கு முன்னாலேயே சாகக் கிடக்கும் ரசிகருக்காக அவருக்கு மட்டும் ஸ்பெஷலாக காட்டியுள்ளார் பிரம்மாண்ட ஹாலிவுட் இயக்குனர்.

ஆங்கிலத்தில் ஃப்ராங்க் ஹெர்பர்ட் எழுதிய புகழ்பெற்ற நாவல் டுயுன். இந்த நாவலை 2019ல் ஹாலிவுட் இயக்குனர் டெனிஸ் விலெனுவெ இரண்டு பாகங்களாக படமாக்க ஆரம்பித்தார். டிமோத்தி சாலமட், ஸென்டாயா, படிஸ்டா உள்ளிட்ட பலர் நடித்த டுயுன் பார்ட் 1 கடந்த 2021ல் வெளியாகி பெரும் வசூல் சாதனை படைத்தது.

dune-2
dune-2

அதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள டுயூன் பார்ட் 2-ம் உலகம் முழுவதும் கடந்த 4 நாட்களில் ரூ.1556 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்த படம் இந்த மாதம் மார்ச் 1ல் தான் வெளியானது. ஆனால் ஒரே ஒரு ரசிகருக்காக இந்த படம் ஜனவரி மாதமே அவருக்கு மட்டும் திரையிடப்பட்டுள்ளது.

நோயாளியின் இறுதி ஆசை:

உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருந்துள்ளார். தான் இறப்பதற்குள் டுயுன் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்த்து விட வேண்டும் என ஆசைப்பட்டுள்ளார். ஆனால் அவர் உடல்நிலைக்கு அவர் வீட்டை விட்டே வெளியே செல்ல முடியாது. இந்நிலையில் இந்த செய்தி டுயுன் பட இயக்குனர் டெனிஸ் விலெனுவெவிற்கு தெரிய வந்துள்ளது..

இது நடந்தது ஜனவரி மாதத்தில். இப்போது டுயுன் 2 படத்தின் ரன்னிங் டைம் 2 மணி நேரம் 46 நிமிடங்கள்தான். ஆனால் அப்போது கட் செய்திருந்த வெர்ஷனில் படத்தின் ரன்னிங் டைம் 3 மணி நேரம் 15 நிமிடங்கள். அப்போதுதான் டுயுன் ரசிகர் ஒருவர் விரைவில் மரணமடைய போகிறார் என்றும், அதற்கு முன் டுயுன் 2ம் பாகத்தை பார்க்க விரும்புகிறார் என்றும் இயக்குனர் டெனிஸ் விலெனுவெவிற்கு தகவல் வந்துள்ளது.

அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு டுயுன் 2வின் அன்கட் வெர்சனை வேகமாக தயார் செய்து அதை ஒரு லேப்டாப்பில் வைத்து லேப்டாப்பை தனது உதவியாளர் ஒருவரிடம் கொடுத்து அந்த நோயாளியை சென்று பார்த்து படத்தை போட்டுக் காட்டுமாறு அனுப்பியுள்ளார். இதற்காக அந்த உதவியாளர் அமெரிக்காவில் இருந்து கனடா பயணித்து அந்த நோயாளிக்கு படத்தை காண்பித்துள்ளார்.

படம் பார்த்து முடிந்த 4 நாட்களுக்கு பின்னர் அந்த நோயாளி உயிரிழந்து விட்டாராம். இந்த செய்தியை லவாண்ட் கனடிய சேரிட்டி அமைப்பை சேர்ந்தவர் ஒரு நேர்க்காணலில் தெரிவித்துள்ளார். ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேற்ற இயக்குனர் செய்த செயல் பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

POPULAR POSTS

vijay
ajith
sundar c
bharath
samantha prabhas
vijayakanth SA chandrasekar
To Top