இப்படி படம் எடுத்தா எப்படி உருப்படும்!.. விஜய் அஜித்தை நேரடியாக விமர்சித்த தயாரிப்பாளர்!.. ஆனா அதுவும் உண்மைதான்!..

இந்தியாவில் உள்ள சினிமா துறைகளிலேயே அதிகமாக பணம் புழங்கும் துறைகளாக இந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாதான் இருக்கின்றன. அதிலும் தமிழ் சினிமாவில் நாளுக்கு நாள் கதாநாயகர்களுக்கான சம்பளம் என்பது அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

முன்பெல்லாம் ஒரு கதாநாயகருக்கு ஒரு 10 கோடி ரூபாய் அதிகரிப்பதற்கு ஐந்து முதல் ஆறு வருடங்கள் ஆகும். ஆனால் இப்பொழுது எல்லாம் மிக எளிதாக அம்பது கோடி அறுபது கோடி என்று அதிகரித்து விடுகிறது. இது குறித்து தயாரிப்பாளரான தென்னப்பன் பேட்டியில் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.

vijay
vijay
Social Media Bar

மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளில் வருவதை விடவும் தமிழ் சினிமாவில் நல்ல படங்களே அதிகமாக வருவதில்லையே அதற்கு காரணம் என்ன என்று அவரிடம் கேட்ட பொழுது அதற்கு பதில் அளித்த தென்னப்பன் மலையாளம் மற்றும் கன்னட திரைப்படங்களில் படத்திற்கு தயாரிப்பிற்கு ஆகும் செலவில் 25 முதல் 30 சதவீதம் இயக்குனருக்கும் கதாநாயகனுக்கும் சம்பளமாக கொடுக்கப்படுகிறது.

மீதமிருக்கும் 70 முதல் 75 சதவீதம் தொகையை வைத்து அவர்கள் திரைப்படத்தை எடுக்கின்றனர். அதனால் இந்த திரைப்படங்களும் ஆரோக்கியமான திரைப்படங்களாக இருக்கின்றன. ஆனால் தமிழ் சினிமாவை பொறுத்தவரை கதாநாயகனுக்கும் இயக்குனருக்குமான சம்பளமே 60 முதல் 70% பட்ஜெட்டில் இருந்து ஒதுக்கப்படுகிறது.

மீதமிருக்கும் தொகையை வைத்து அவர்கள் திரைப்படத்தை எடுக்கும் பொழுது அது எப்படி நல்ல படமாக இருக்கும் என்று நேரடியாக கேள்வி எழுப்பி இருக்கிறார். விஜய், அஜித், ரஜினி மாதிரியான பெரும் நடிகர்கள் கிட்டத்தட்ட இவர் சொல்வது போலவே படத்தின் தயாரிப்பு செலவில் 50 சதவீதத்திற்கும் அதிகமான தொகையை சம்பளமாக வாங்குகின்றனர் எனவே ஒரு வகையில் இவர் சொல்வதும் உண்மைதான் என்று இதற்கு பதில் அளிக்கின்றனர் நெட்டிசன்கள்.