Connect with us

சாதி மறுப்பு திருமணம்.. என்னத்த சாதிச்சீட்டிங்க!.. சர்ச்சையை கிளப்பிய மோகன் ஜி..!

mohan-g

Latest News

சாதி மறுப்பு திருமணம்.. என்னத்த சாதிச்சீட்டிங்க!.. சர்ச்சையை கிளப்பிய மோகன் ஜி..!

தமிழில் சர்ச்சைக்குரிய ஒரு சில இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் மோகன் ஜி. பெரும்பாலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பு பெறவில்லை என்றாலும் கூட வெளியாகும் சமயத்தில் கொஞ்சம் பேசப்படும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன.

இவர் அடிக்கடி பல சமூகம் சார்ந்த கருத்துக்களை முன் வைப்பதுண்டு சில சமயங்களில் அவை சர்ச்சைக்குரியதாக மாறும் சில சமயங்களில் அதற்கு ஆதரவுகள் அதிகமாக கிடைக்கும். உதாரணத்திற்கு சமீபத்தில் கூட ஐஸ் பிஸ்கட் என்று விற்கப்படும் ஒருவகை உணவு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் மோகன் ஜி.

இயக்குனர் மோகன் ஜி:

அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அந்த உணவிற்கு தடை விதித்திருந்தது. இந்த மாதிரியான ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்யும் அதே நேரத்தில் சாதி ரீதியாக இவர் பேசும் விஷயங்கள் நிறைய சர்ச்சைக்கு உள்ளாகும் விஷயங்களாக இருக்கின்றன.

அவரது திரைப்படங்களே அதற்கு உதாரணம் என்று கூறலாம். இந்த நிலையில் திருநெல்வேலியில் இரண்டு வெவ்வேறு  சாதியை சேர்ந்த இருவர் கம்யூனிஸ்ட் நிர்வாகிகள் தலைமையில் திருமணம் செய்து இருக்கின்றனர்.

தமிழில் வரவேற்பு:

வீட்டில் பெற்றோர்கள் எதிர்த்த காரணத்தினால் அவர்கள் இதை செய்திருக்கின்றனர். இதனால் அதிரடியாக அலுவலகத்திற்குள் புகுந்து அந்த பெண்ணின் வீட்டார் அடித்து நொறுக்கி இருக்கின்றனர்.

இதுக்குறித்து பேசிய இயக்குனர் மோகன் ஜி இந்த நிலையை கடந்த பெற்றோர்களுக்கு மட்டுமே இது என்ன மாதிரியான வலி என்று தெரியும் பெற்றவர்களை இப்படி அழ வைப்பது நல்லது கிடையாது. அப்படி என்னதான் சாதிக்க போறீங்க அவங்களை சம்மதிக்க வைத்து உங்கள் காதலை கைகூட செய்யுங்கள் என்று பேசி இருந்தார் மோகன்ஜி.

இவர் வன்முறைக்கு ஆதரவாக பேசியிருப்பதாக கூறி இந்த பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

To Get Tamil Cinema News Updates Via Google News Please CLICK HERE

தமிழ் சினிமா அப்டேட்களை கூகுள் நியூஸ் வழியாக பெற இங்கு க்ளிக் செய்யவும்

Latest News

aravind samy
actress sruthi raj
bigg boss season 8 tamil
pooja hegde vijay
pikaboost 2
To Top