Connect with us

கமல் படத்துக்கே இவ்வளவுதான் மரியாதை!.. உதயநிதி செயலால் கடுப்பான கல்கி படக்குழு

udhayanithi kamal

Latest News

கமல் படத்துக்கே இவ்வளவுதான் மரியாதை!.. உதயநிதி செயலால் கடுப்பான கல்கி படக்குழு

பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு நடிகர் பிரபாஸ் நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் பேன் இந்தியா திரைப்படங்களாகவே இருந்து வருகிறது. ஒரு பேன் இந்தியா ஸ்டாராக பிரபாஸ் மாறிவிட்டார் என்றுதான் கூற வேண்டும். இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரும் பட்ஜெட்டில் உருவாகி வருகின்றன.

ஆனால் பாகுபலி திரைப்படத்திற்கு பிறகு வரிசையாக தோல்வி படங்களை தான் கொடுத்து வந்தார் பிரபாஸ். அதற்கு பிறகு அவர் சாகோ என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் படம் வெளியான பிறகு அந்த வரவேற்பு குறைந்தது.

அதற்கு பிறகு ராதே சியாம் என்கிற திரைப்படத்தில் நடித்தார். அதுவும் தோல்வியை கண்டது. அந்த திரைப்படத்தில் கைரேகை ஜோசியராக பிரபாஸ் நடித்திருந்தார். அதற்கு தொடர்ந்து மூன்றாவதாக பிரபாஸ் நடித்த திரைப்படம் ஆதிபுருஷ்.

வரிசையாக தோல்வி:

அனிமேஷன் திரைப்படமாக வெளியான இந்த திரைப்படமும் அதிக விமர்சனத்திற்குதான் உள்ளானது. அந்த திரைப்படத்தில் வரும் நபர் பிரபாஸ் போலவே இல்லை என்றும் குற்றசாட்டு கிளம்பி வந்தது. அதற்குப் பிறகு மீண்டும் இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம்தான் அவருக்கு பெரும் வெற்றியை பெற்றுக் கொடுத்தது.

தொடர்ந்து அடுத்து வரும் திரைப்படம் கல்கி இந்த திரைப்படம் பேன் இந்தியா திரைப்படம் என்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் பிரபலமாக இருக்கும் நடிகர்களை இந்த திரைப்படத்தில் நடிக்க வைத்திருக்கின்றனர்.

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் கமல்ஹாசனுக்கும் முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. விஷ்ணு பகவானின் அவதாரமான கல்கி அவதாரத்தை பாதுகாப்பதை கதையாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.

புதுப்படத்தில் வந்த சிக்கல்:

அஸ்வத்தாமன் கதாபாத்திரத்தில் அமிதாபச்சன் நடித்துள்ளார் அமிதாபச்சனும் பிரபாசும் இணைந்து பிறக்கப் போகும் கல்கி அவதாரத்தை காப்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தை வாங்குவதற்கு ஹிந்தி சினிமாவில் அதிக போட்டிகள் நிலவு வருகின்றன. ஆனால் தமிழ்நாட்டை பொறுத்தவரை இன்னும் யாரும் அதற்கான தமிழ் உரிமத்தை வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

kamalhaasan
kamalhaasan

எனவே அதற்கான விநியோக உரிமையை ரெட் ஜெயண்ட் நிறுவனம் வாங்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளார் கமல்ஹாசன். இது குறித்து உதயநிதியிடமும் பேசியிருக்கிறார். அதனை தொடர்ந்து பொதுவாகவே ரெட் ஜெயண்ட் நிறுவனம் முன்பணம் எதுவும் கொடுக்காமல்தான் ஒரு திரைப்படத்தை வாங்குவார்கள்.

பிறகு அதை வெளியிட்ட பிறகு வரும் லாபத்தில் அவர்களுக்கான பங்கை எடுத்துக்கொண்டு மீதத்தை தயாரிப்பாளர்களுக்கு கொடுத்து விடுவார்கள். ஆனால் இந்த திரைப்படத்தை பொருத்தவரை இது 750 கோடிக்கு எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால் முன்பணம் கொடுத்தால் தான் திரைப்படத்தை கொடுக்க முடியும் என்று கூறியிருக்கின்றனர்.

ஆனால் இதனைக் கேட்ட பிறகும் கூட ரெட் ஜெயண்ட் நிறுவனம் 2 கோடி ரூபாய் மட்டும் கொடுத்து அந்த நிறுவனத்தை வெறுப்பேற்றி இருக்கிறது அதனை தொடர்ந்து அவர்கள் உதயநிதிக்கு திரைப்படத்தை கொடுப்பதற்கு மறுத்துள்ளனர்.

Latest News

reshma
vijay
reshma pasupuleti
priya-bhavani-shankar
vj-sangeetha
To Top