உன் படம் வேணாம்!.. இயக்குனரை நிராகரித்த பிரபுதேவா.. காமெடி நடிகரை வச்சி ஹிட்.. பதிலடி தந்த இயக்குனர்!..
Sollamale Movie: ஒரு சில நடிகர்கள் கூறும்பொழுது இந்த படங்களில் நான் முதலில் நடிக்க வேண்டியிருந்தது. சில காரணங்களுக்காக வேறு ஒரு நடிகர் நடித்திருக்கிறார் என கூறுவார்கள்.
ஒரு சில வெற்றி படங்களை குறித்து நாம் ஆராயும் பொழுது ஒரு படத்தில் நடிக்க இருந்த நடிகர் ஒருவராகவும், ஆனால் அதன் பிறகு வேறு ஒரு நடிகர் நடித்து அந்த படம் மிகப்பெரியஅளவிற்கு வெற்றிப்படமாகவும் அமைந்திருக்கும். மேலும் அந்த படங்களை பற்றி முன்னதாக நடிக்க இருந்த நடிகர்கள் சில சுவாரசியமான தகவல்களை கூறி இருப்பார்கள்.
அந்த வரிசையில் ஒரு பிரபல நடிகர் ஒருவர் தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றி ஒரு படத்தில் நடிக்க இருந்து, அவராகவே விலகியது குறித்து தற்பொழுது பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கூறியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சொல்லாமலே
இந்தப் படத்தை அவ்வளவு எளிதாக யாரும் மறந்திருக்க மாட்டார்கள். காதல் திரைப்படமான இந்த படத்தில் பிரபல காமெடி நடிகராகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்த லிவிங்ஸ்டன் மற்றும் கௌசல்யா நடித்து மாபெரும் வெற்றி பெற்ற படம்.
இந்த படத்தில் கரண், விவேக், ஆனந்த், பிரகாஷ்ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். மேலும் இந்த திரைப்படத்தை இயக்குனர் சசி இயக்கிருந்தார் இவருக்கு இதுதான் முதல் படமாகும்.

தன்னுடைய முதல் படத்திலேயே வெற்றி கண்ட சசி இந்த படத்தின் மூலம் நட்சத்திர இயக்குனராக அறியப்பட்டார். மேலும் இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படம் ஹிந்தி மற்றும் தெலுங்கில் மறு ஆக்கம் செய்யப்பட்டது.
மேலும் இந்த படத்தில் லிவிங்ஸ்டன் அவரின் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதை விட உண்மையாக வாழ்ந்து இருக்கிறார் என்றும் அப்பொழுது ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
ஆனால் தற்பொழுது தயாரிப்பாளர் கலைபுலி தானு இந்த படத்தில் முதலாவதாக நடித்திருந்த நடிகரைப் பற்றி கூறியிருப்பது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
படத்தை மறுத்த பிரபல நடிகர்
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அழைக்கப்படும் பிரபுதேவா இந்த படத்தின் கதையை கேட்டுவிட்டு நன்றாக இருக்கிறது நான் நடிக்கிறேன் என கூறியுள்ளார். இயக்குனர் சசியின் முதல் படமான இந்த படத்தில், சசி ஒரு படத்திற்கான வடிவமைப்பு ஒன்றை கொடுத்திருக்கிறார்.
அந்த வடிவமைப்பில் சசியின் பெயர் முதலாவதாகவும், அதன் கீழ் கலைப்புலி தானு என்றும், அதன் பிறகு கடைசியாக பிரபு தேவா-வின் பெயரும் இடம் பெற்று இருக்கிறது.

தன்னுடைய பெயரை கடைசியாக பதிவிட்டு இருப்பதால், இந்த படத்தை நான் நடிக்க மாட்டேன் என அவர் கூறியிருக்கிறார். இது குறித்து நடிகர் பிரபுதேவாவிடம் கலைப்புலி தாணு பேசிய போது அவர் படத்தில் நடிக்க நான் ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறியிருக்கிறார். மேலும் கலைப்புலி தாணு இயக்குனர் சசியை அழைத்து ஏன் இவ்வாறு செய்தாய். பிரபு தேவா-வை சந்தித்து படத்திற்கு சம்மதம் வாங்கிக் கொண்டு வா என அனுப்பியுள்ளார்.
இயக்குனர் சசியும் பிரபுதேவாவிடம் எவ்வளவோ கேட்டுள்ளார். ஆனால் தன்னுடைய பெயரை கடைசியாக பதிவிட்டிருந்த ஒரே காரணத்தினால் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என பிரபுதேவா கூறியதாக கலைப்புலி தாணு தெரிவித்திருப்பது தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.